சுடர் - 5

2.1K 72 5
                                    

தன் முன்கோபத்தாலும், முட்டாள் தனத்தினாலும்  அவன் தந்தையின் பல சொத்துக்களை இழந்திருந்தான் பரிதி. இன்று அவன் காதலித்தவளும் அவனின் குணம் பிடிக்காமல் அவன் மனதை சுக்குநூறாக உடைத்து விட்டு போய்விட, இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்று உணர்ந்து எதையும் செய்து முடிக்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டான்.

அவன் தந்தை இறந்த நாளில் இருந்து அவன் தாய்மாமன் சுந்தரம் தான் அவனுடன் இருந்து அனைத்து பணிகளையும் கவனித்துக் கொண்டார்.

விரக்தி என்னும் பெயரில் அவன் இழந்த அனைத்தையும் எப்பாடுபட்டாவது மீட்க வேண்டும் என்று மனதில் உறுதியாக எண்ணி இருந்தான். அவன் காதல் தோல்வியில் இருந்து வெளிவர அதுதான் மருந்து என்றும் நினைத்தான்.

எண்ணியதை செயல்படுத்தவும் தொடங்கி இருந்தான்.

அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் அவன் தந்தை விட்டு சென்ற செல்வத்தை இரண்டு மடங்காக உயர்த்தியும் இருந்தான்.

இளமதிக்கு அவளின் இறுதி ஆண்டு கல்லூரி படிப்பு தொடங்கி இருந்தது. அதிக நேரம் அருகில் இருந்த வயல்களில் தான் அவர்களுக்கு வேலை இருந்தது. அவள் ஆத்மார்த்தமாக ஒவ்வொன்றையும் கற்றுக் கொண்டாள்.

அந்த ஈடுபாட்டினால் வகுப்பில் முதல் மாணவியாகவும் திகழ்ந்தாள். படிப்பு முடித்து மாலை வேளையில் அருகில் இருந்த சிறு துணிக்கடையில் வேலையும் செய்தாள். அவளுக்கு தேவைப்படும் சிறு சிறு பொருட்களை அவளே வாங்கிக் கொள்ள எண்ணி அதை செய்து கொண்டு இருந்தாள்.

கல்லூரி விடுமுறை நாட்களில் அவள் தோழிகள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு சென்று விட இவள் பெரும்பாலும் அவள் அறையிலேயே தான் இருந்து வந்தாள்.

அடுத்து ஒரு வாரம் விடுமுறை அறிவித்து இருந்தனர், அனைவரும் ஊருக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த சமயம், இளமதி அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தாள்.

என் வாழ்வின் சுடரொளியே!Tempat cerita menjadi hidup. Temukan sekarang