அறுவை சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பி இருந்தார் ராதாவின் தந்தை மாணிக்கம். அவர் மருத்துவமனையில் இருந்த இரண்டு வாரங்களும் இளமதி அவர்களுடனே இருந்து சோர்ந்து போய் இருந்த ராதாவையும் அவள் தாய் மரகத்தையும் கவனித்துக் கொண்டாள்.
"ரொம்ப நன்றி இளமதி. எனக்கு கூட பிறந்தவ இருந்திருந்தா கூட இவ்வளவு நல்லா எங்கள பாத்திருப்பாளானு தெரியல!" கண்களில் கண்ணீரோடு அவளுக்கு நன்றி கூறிவளை அதட்டுவது பார்த்தாள் இளமதி.
"நன்றி எல்லாம் சொல்லி என்னை அந்நியமாக்கும் உத்தேசமா? அதெல்லாம் நடக்காது. நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் உன் சகோதரி தான்" என்றால் முகத்தில் மலர்ந்த புன்னகையுடன்.
"சரி ராதா. நீ அம்மா அப்பாவ நல்லபடியா பார்த்துக்கோ. நான் இப்போ கிளம்புறேன்" என்று மென்மையாக. "சரி மதி! அம்மாவும் இப்போது தான் தூங்கி இருக்காங்க. நீ போயிட்டு வா" என்று கூறி அவளை அனுப்பி வைத்தாள்.
இளமதி நிம்மதியாக அவள் வீட்டுக்கு புறப்பட்டாள். அவள் ஒரு வாரம் தன் தோழியுடன் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்று கூறி அவனிடம் அனுமதி கேட்ட பொழுது அவளுக்கு எங்கே அவன் சம்மதிக்காமல் போய்விடுவானோ என்ற கவலை இருந்தது.
ஆனால் அவனோ வெகு சாதாரணமாகவ அவளை செல்ல அனுமதித்தான். அதில் அவளுக்கு மேலும் நிம்மதியாக இருந்தது.
அவள் மாலை வீடு திரும்பிய நேரம், அதிசயமாக பரிதி அங்கு தான் இருந்தான். அவன் வரவேற்பு அறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்து அவன் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டு இருந்தான்.
இளமதி அவனிடம் சென்றாள். யாரோ அங்கு வந்து நின்றதை உணர்ந்தவன் அவன் தலையை நிமிர்த்தி பார்த்தான். அங்கு இளமதி நின்றிருப்பதை பார்த்து.
"உன் ஃப்ரெண்ட் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போயாச்சா?" என்றான். "ம்ம்! இன்னிக்கு தான் வீட்டுக்கு போனாங்க. ரொம்ப நன்றி!" என்றாள் குரலில் நன்றியுடன்.
VOUS LISEZ
என் வாழ்வின் சுடரொளியே!
Roman d'amourஅழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து த...