சுடர் - 20

2K 71 3
                                    

அறைக்குள் நுழைந்தவள் எங்கு தூங்க வேண்டும் என்று தெரியாமல் அங்கேயே நின்று விட்டாள்.

"நீ கொஞ்சம் நகர்ந்து நின்று கனவு கண்டால் நானாவது உள்ள போய் தூங்குவேன்" என்றான் அவள் பின்னால் நின்று கொண்டு. அவள் சட்டென்று நகர்ந்து நின்று கொண்டாள்.

அவன் அலட்டிக் கொள்ளாமல் நேரே சென்று கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டான். அவள் எதுவும் சொல்லாமல் அங்கேயே நின்றிருக்க, அவன் முகத்தை நிமிர்த்தி அவளை பார்த்தான்.

"என்ன? ராத்திரி முழுவதும் அங்கேயே நின்றிருக்க உத்தேசமா?" என்றான் புருவத்தை உயர்த்தி. "இல்ல, அது..." அவள் தயங்க,

"நம்ம வீட்டுல செய்த மாதிரி ஸ்டென்ட் எல்லாம் இங்கேயும் செய்யலாம்னு நினைச்சு வெளியே எதாவது போய் படுத்துறாத! காலையில பனி கட்டியா மாறி போயிருவ. அதனால எதையும் யோசிச்சுட்டு இருக்காம, இங்க வந்து அமைதியா படுத்து தூங்கு" என்றான் அவள் முகத்தை பார்த்து.

"நம்ம வீடா! எப்பவும் இந்த நம்மங்கற வார்த்தை இவன் பேச்சில் வராதே? இன்னிக்கு என்ன புதுசா நம்ம வீடுனு சொல்கிறான்? வாய் தவறி சொல்லி இருப்பான்" என்று அவளுக்கு அவளே நினைத்து கொண்டு அங்கேயே நின்றிருக்க,

"என்னவோ செய்! இங்கேயே கீழே படுக்கலாம்னு நினைக்காத. நீ நினைப்பதை விட இங்க குளிர் அதிகமா இருக்கும். அப்புறம் உன் இஷ்டம்" என்று கூறி கொண்டு முகத்தை மூடிக் கொண்டு படுத்து விட்டான்.

அவளுக்கும் அதே எண்ணம் தான். அவள் தடிமனான ஒரு ஸ்வெட்டரை போட்டிருந்த போதும், அந்த அறை சற்று வெதுவெதுப்பாக இருந்த போதும் அவளால் குளிரை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் அமைதியாக சென்று கட்டிலின் இன்னொரு புறம் படுத்துக் கொண்டாள்.

அதன் பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் வேறு புறமாக திரும்பி படுத்து கொண்டார்கள்.

புதிய சூழலில் அவளுக்கு உறங்க சற்று நேரம் ஆனதால் காலையில் எழவும் சிறிது தாமதம் ஆகியது. இளமதி கண்விழித்த பொழுது நன்றாக விரிந்திருந்தது. அவள் கண்களை கசக்கி கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

என் வாழ்வின் சுடரொளியே!Donde viven las historias. Descúbrelo ahora