"பரி வேண்டாம், ரிதி வேண்டாம், ரிப திரி இப்படி ஏதாவது?" என்று கூறி நகைத்தவளை முறைத்தான் அவன்.
"சரி! சரி! வேற எதாவது யோசிக்கலாம்" என்று கூறி கொண்டு இருந்தவள் விழிகள் பளிச்சிட்டது."பரி திரி, ரெண்டுல இருந்து 'ரி'ய எடுத்துட்டா, பதி! இது நல்லா இருக்குல? எப்படியும் நீங்க தானே என் பதி, உங்க பெயர்ல இருந்து எடுத்த மாதிரியும் ஆயிற்று" என்றாள் அழகாக புன்னகைத்து.
அவன் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க, "என்னாச்சு? இது ஓகே தானே?" என்றாள் அவன் தோள்களை குழுக்கி, அவன் சரி என்பது போல் தலை அசைக்க, "ஓகே, பதி தேவா! இப்பொழுது வீட்டுக்குள் செல்வோமா? ஏற்கனவே குளிர் அதிகரிக்க தொடங்கி விட்டது" என்றாள் சிரித்து கொண்டே.
அவனும் தலை அசைத்து இருவரும் உள்ளே சென்றார்கள்.
"பாட்டி, இன்னிக்கு நான் சமையல் பண்ணுறேன். நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க" என்றாள் அவர் கையில் வைத்திருந்த பாத்திரத்தை வாங்கி கொண்டு.
"வேண்டாம் மா! நீங்க இங்க கொஞ்ச நாள் தங்கி ஓய்வெடுக்க வந்திருக்கீங்க. எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்யணும். நீ போய் உட்காரு. நான் இதை எல்லாம் பார்த்துக்கிறேன்" என்றார் அவர்.
"அதெல்லாம் முடியாது. நீங்க போய் உட்காருங்க" என்று கூறி அவரை அமர வைத்து விட்டு வந்து சமையலை கவனித்தாள். அவள் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டு இருப்பதை ரசித்தவாறே பாட்டி அங்கு அமர்ந்திருந்தார்.
அவள் சமைத்து முடித்து அனைத்தையும் மேசை மேல் எடுத்து வைத்து விட்டு அவரை பார்த்தாள்.
"படிச்சிட்டு இருக்கும் பொண்ணு, இந்த வேலை எல்லாம் உனக்கு தெரியாதுனு நினைச்சேன். ஆனா நீ எல்லா வேலைகளையும் எந்த சோர்வும் இல்லாமல் பண்ணுறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு டா" என்றார் அவள் கரத்தை பற்றி கொண்டு.
"இதெல்லாம் செய்து எனக்கு பழக்கம் இருக்கு பாட்டி" என்றாள் அவள் புன்னகையுடன். அவர் தலை அசைத்து விட்டு, பரிதியையும் தாத்தாவையும் சாப்பிட அழைத்தார்.
BINABASA MO ANG
என் வாழ்வின் சுடரொளியே!
Romanceஅழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து த...