சுடர் - 18

1.8K 72 14
                                    

இளமதி வீட்டுக்குள் நுழைந்த பொழுது வீட்டில் யாரும் இல்லை. வேலைக்கு வரும் பெண்கள் இருவரும் சமையல் அறையில் இருந்தார்கள். இளமதி நிம்மதியுடன் வீட்டுக்குள் நுழைந்து அவள் அறைக்கு சென்றாள்.

சிறிது நேரம் கழித்து அவள் வெளியே வந்த பொழுது சுந்தரம் வரவேற்பு அறையில் அமர்ந்திருப்பதை பார்த்து அவர் அருகில் சென்றாள்.

"வாங்க!" என்றாள் அவள் முகம் மலர, "வா மா! உன்ன பார்க்க தான் காத்திருக்கிறேன்" என்றார் புன்னகையுடன்.

"என்ன விஷயம் சொல்லுங்க?" அவள் புன்னகை மாறாமல் கேட்டாள். அவரை என்ன முறை சொல்லி கூப்பிடுவது என்று தெரியாமல் வெறுமனே இவ்வாறு பேசுவது அவளுக்கு சில சமயங்களில் கஷ்டமாக இருந்தது.

"எனக்குனு குடும்பம் இல்லை மா. இருந்திருந்தா, இந்நேரம் உன் வயசுல எனக்கு ஒரு மகள் இருந்திருப்பாள். அதனால நீ என்ன அப்பான்னு கூப்பிட்டா எனக்கும் சந்தோஷமா இருக்கும்" அவர் கூறியதைக் கேட்ட அவள் முகம் மேலும் மலர்ந்தது. அவள் தலையை அசைத்தாள்.

"உனக்கு அடுத்த இரண்டு வாரம் கல்லூரி விடுமுறை தான?" அவர் வினவினார். அவளும் அதை எண்ணி தான் கவலையாக இருந்தாள். இரண்டு வாரம் கழித்து அவளுக்கு தேர்வுகள் தொடங்க இருப்பதால் அதுவரை கல்லூரி விடுமுறை, இந்த சிறையில் அடைப்பட்டு இருந்தால் அவளால் சரியாக படிக்கவும் முடியாது என்று எண்ணி வருந்தி கொண்டு இருந்தாள்.

"என்ன மா யோசிக்குற?" அவர் அவள் முகம் பார்த்து கேட்க, "ஆமா! அடுத்த இரண்டு வாரம் எனக்கு விடுமுறை தான்" என்றாள்.

"அதான் அதில் ஒரு மூன்று நாட்கள் நீயும் பரிதியும் அவன் பாட்டி வீட்டில் தங்கி இருந்து விட்டு வரவேண்டும்" அவர் கூறியதைக் கேட்டு அவள் முகம் மாறியது. அவனை பார்க்கவே வேண்டாம் என்று இருந்தால் இப்பொழுது அவனுடன் சேர்ந்து வேறு ஊருக்கு வேறு போக சொல்லுறாங்களே!" மனதில் எண்ணி வருந்தினாள்.

அவள் மன எண்ணங்களை அவள் முகமே அவருக்கு உணர்த்த, அவர் புருவம் சுருங்கியது. இவளும் சேர்ந்த பரிதிக்கு அவன் தொழிலில் ஈடுபட்டு அவனுக்கு உதவியையும், பரிதியே நேரில் சென்று அவளை கல்லூரியில் அழைத்து வந்தான் என்பதையும் கேள்வி பட்டு இருவரும் நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தான் அவர் எண்ணி இருந்தார்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now