சுடர் - 19

1.9K 67 7
                                    

"அப்பா!" இளமதி அவரை அப்பா என்று அழைத்தது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. அவர் மகிழ்ச்சியாக அவள் முகத்தை பார்த்தார்.

"நீங்க சொன்ன எல்லாம் எனக்கு தெளிவாகவே புரிந்தது. இல்லாதவர்களுக்கு தான் அதனுடைய அருமை தெரியும் என்று சொல்வார்கள். தாய் தந்தையை சின்ன வயசுல இழந்த எனக்கு அந்த வேதனை நல்லாவே புரியும்.

உங்களுடைய நிலையும் என்னை போன்றது தான். ஆனா அவர் ஏனோ இறந்த தாயை நினைத்து கொண்டு அவர் அருகில் இருந்த தாயின் அருமையை உணராமலே வளர்ந்து விட்டார்" என்றாள் சோகமாக.

"உண்மை தான் மா. மகேஷ்வரி இந்த வீட்டு வேலைக்காரியா இருந்த போது அவனுக்கு அவள் மேல் இருந்த பாசம், அவ அம்மா ஸ்தானத்திற்கு வந்ததும் அவனுக்கு இல்லாமல் போனதோடு வெறுப்பும் சேர்ந்து கொண்டது" என்றார் சோர்வாக.

"என்னால அவர் மனைவியா இருந்து அவருடன் காலம் முழுவதும் துணையா இருக்க முடியுமானு தெரியலை. ஆனா, நிச்சயம் ஒரு நல்ல தோழியா இருந்து அவர் மனதை மாற்ற என்னாலான எல்லா முயற்சிகளையும் செய்வேன்.

எங்க ரெண்டு பேருக்கும் இந்த உறவு ஏதோ ஒரு விபத்து போல் அமைந்து விட்டது. இதை எப்படி எடுத்துட்டு போக முடியும்னு எனக்கு இப்பவும் தெரியவில்லை. ஆனா, இதுவரை அவர் மேல் இருந்த சில தவறான அபிப்ராயம் இப்போ என் மனசுல சுத்தமா இல்லை" என்றாள் புன்னகையுடன்.

எந்த உறவும் அவ்வளவு எளிதில் அமைந்து விடாது. அதற்கு ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சில காலம் ஒன்றாக இருந்தால் மட்டுமே அது அமையும் என்று அவர் உணர்ந்து இருக்க புன்னகையுடன் தலை அசைத்தார்.

"அப்புறம் மா, பாட்டி தாத்தா ரெண்டு பேரும் ரொம்ப கோபமா இருக்காங்க, நான் அவர்கள் உங்க கல்யாணத்திற்கு வரக் கூடாதுனு சொன்னதுக்காக" அவர் கூற,

"ஏன் கூப்பிடல? பரிதி அவர்களையும் வெறுத்து ஒதுக்கிவிட்டாரா என்ன?" அவள் குழப்பமாக வினவினாள்.

"இல்ல மா, அவர்கள் என்னை பெற்றவர்கள் தான். பரிதிக்கு இருவரையும் மிகவும் பிடிக்கும். ஆனா அவுங்க ரெண்டு பேரும் இவனை போலவே மகேஷ்வரியை வெறுத்தார்கள்.

என் வாழ்வின் சுடரொளியே!Onde histórias criam vida. Descubra agora