"ராதா!" கண்ணீருடன் அவள் அருகில் வந்து நின்ற ராசாத்தியை பார்த்து ஆச்சரியமாக இருந்தது ராதாவுக்கு.
"வாங்க அத்தை! உட்காருங்க" என்று கூறி அவளை உள்ளே அழைத்தாள்.
ராதாவை பற்றிய உண்மைகள் தெரிந்ததும் ராசாத்தி அவளை வீட்டை விட்டு வெளியேற்றியே ஆக வேண்டும் என்று பெரும் போராட்டமே செய்திருந்தாள்.
ராதாவும் அவள் உரிமைகளை விட்டு கொடுக்காமல் அவளுக்கு ஈடு கொடுத்து பேச, சண்டை வலுத்து கொண்டே போனது. இறுதியில் ரகுபதி முதல் முறையாக அவன் அன்னையை எதிர்த்து நின்று அவன் மனைவி இல்லாத வீட்டில் தானும் தங்க போவது இல்லை என்று கூறி அவளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.
ராசாத்தி அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் ராதா கருத்தரிப்பதாக கூறி மணிவாசகம் ஆனந்தத்தில் திளைத்தது அவளுக்கு மேலும் எரிச்சலை வர வைத்தது.
அவளை என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்த சமயம் தான் அந்த நிகழ்வு நடந்தது.
தனியாக தோட்டத்திற்கு சென்றிருந்த அவள் மகள் ராகவியிடம், அவளிடம் வேலை செய்து, அவள் இளமதிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்த முருகன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறான்.
அவள் அவனை தடுத்த பொழுது உன் அம்மா எனக்கு கொடுத்த வாக்கு படி உன் குடும்பத்தில் இருந்து ஒருவரையாவது திருமணம் செய்து கொண்டால் தான் என் கனவு நிறைவேறும் என்று கூறி அவளை அவன் மேலும் நெருங்கிய சமயம் ராதா அதை கவனித்திருந்தாள்.
அவள் கர்ப்பிணி என்பதையும் மறந்து ஆபத்தில் இருந்த ராகவியை தன் உயிரை பணயம் வைத்து காப்பற்றியதாக ரம்யா ராசாத்தியிடம் சொன்னதில் இருந்து குற்ற உணர்வில் மனம் வலித்தது அவளுக்கு.
சொத்து சுகத்தை பார்த்து அவள் மகனுக்கு மணம் செய்து வைத்திருந்தால், இவ்வாறு ஒரு குணவதி மருமகளாக கிடைத்திருப்பாளா என்று தோன்றியது அவளுக்கு.
أنت تقرأ
என் வாழ்வின் சுடரொளியே!
عاطفيةஅழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து த...