சுடர் - 3

2.4K 76 6
                                    

அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து அழகிய கோலமிட்டு விட்டு, சமையல் அறைக்குள் நுழைந்தாள் இளமதி. அன்று வழக்கத்திற்கு மாறாக ராசாத்தி சமையல் அறையில் இருக்க, இளமதி ஆச்சரியமாக அவளை பார்த்தவாறு உள்ளே நுழைந்தாள்.

"அத்த காபி வேணுமா?" அவள் கேட்க, "அது இருக்கட்டும், இன்னிக்கு நான் சொல்லுற எல்லாம் சமைச்சு வை! மீன் வறுவல், நாட்டுக் கோழி குழம்பு, முட்டை பொரியல் எல்லாம் ரொம்ப ருசியா இருக்கனும்" அவள் அடுக்கி கொண்டே போக,

"லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே! என்னவா இருக்கும்?" என்று மனதில் யோசித்தாள் இளமதி ஆனால் அதை அவளிடம் கேட்கவில்லை.

"சரி அத்த!" என்று கூறி அவள் வேலைகளை கவனிக்க தொடங்கினாள்.

அவள் சொன்ன அனைத்தையும் செய்து முடிக்கையில் மணி மதியம் பன்னிரெண்டை தான்டி இருந்தது. அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அவள் அறைக்கு சென்று சோர்வாக அமர்ந்திருந்தாள்.

"இளமதி, இத சாப்பிடு கண்ணு! நேத்து முழு நாளும் விரதம்னு சொன்ன, இன்னிக்கு எழுந்ததுல இருந்து இவ்வளவு வேலையும் ஒத்தையா செஞ்ச. இங்க உன்ன சாப்பிட சொல்லி யாரும் சொல்லமாட்டாங்க, நீ தான் உன் உடல் நலத்தை பாத்துக்கணும்" மணிவாசகம் பாசமாக கூறி சாப்பாட்டு தட்டை அவள் கையில் கொடுத்தார்.

இளமதி புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள். "நன்றி மாமா!" என்று கூறி அதை சாப்பிட தொடங்கினாள்.

"ஆமா மாமா, கேட்கணும்னு நினைச்சேன்.‌ இன்னிக்கு என்ன விஷேசம்? அத்த இவ்வளவு தடாபுடலா சமையல் எல்லாம் செய்ய சொல்லுறாங்க?" அவள் ஆவலாக வினவ,

"ரகுபதி இன்னிக்கு வரான் மா, அதான் இவ இந்த குதி குதிக்குறா" அவர் அளித்த பதிலில் அவள் விழிகள் விரிந்தன.

"ரகுபதி மாமா வராரா? சூப்பர்!" அவள் மகிழ்ச்சியாக கூற, அவர் முகமும் மலர்ந்தது. "அவர் படிப்பு எல்லாம் முடிஞ்சுதா?" அவள் கேட்க, "முடிஞ்சுது மா! இனி இங்க தான் இருப்பான்" அவர் மகிழ்ச்சியாக பதில் அளித்தார்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now