காரில் இருந்து இறங்கியவள் முகத்தில் இருந்த வியப்பை பார்த்து அவன் மெலிதாக புன்னகைத்தான்.
"இங்க எதுக்கு வந்திருக்கோம்?" அவள் அதே வியப்புடன் வினவ, "உன் மாமாவ நம்ம கல்யாணம் நடந்த போது பார்த்தது, அவரை பார்க்கணும்னு உனக்கு ஆசை இருக்குனு எனக்கு தெரியும். அதான் நான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்" என்று கூறியவனை இமைக்காமல் பார்த்தாள் அவள்.
"இப்படி எல்லாம் சர்ப்ரைஸ் பண்ண தெரியுமா உங்களுக்கு?" என்றவளை கண்களில் கர்வத்துடன் பார்த்து, "இப்படி ஒரு மனைவி இருக்கும் பொழுது இந்த அளவுக்கு கூட சர்ப்ரைஸ் தர கத்துக்காம இருக்க முடியுமா?" என்றான் புருவத்தை உயர்த்தி.
அவள் முகம் மலர்ந்தது. புன்னகையுடன் கீழே இறங்கினாள். அவர்கள் வரவை எதிர்பார்த்து காத்திருவர் போல் மணிவாசகம் வேகமாக அவர்கள் அருகில் சென்று அவர்களை வரவேற்றார்.
"இளமதி கண்ணு! எப்படி மா இருக்க?" அவர் பாசமாக வினவ, "ரொம்ப நல்லா இருக்கேன் மாமா" என்று பதில் அளித்து மூவரும் வீட்டின் உள் சென்றார்கள்.
வீட்டு வேலை செய்யும் செங்கமலம் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றார்.
வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதை கவனத்தவள், "எல்லாரும் எங்க போயிருக்காங்க மாமா?" என்று கேட்க, "உன் அத்தையும் ராகவியும் கடைவீதிக்கு போயிருக்காங்க, ரகு தோப்புக்கு போயிருக்கான், அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துருவான்" என்றார் புன்னகையுடன்.
அவர்களுக்கு சிற்றுண்டி அளித்து இருவரையும் நல்ல முறையில் உபசரித்தார் மணிவாசகம். வெகு நாட்கள் கழித்து அவரை பார்த்ததில் இளமதி மனம் நெகிழ்ந்தது.
"இளமதி! நீ மாப்பிள்ளையை கூட்டிட்டு போய் வீட்டையும் நம்ம ஊரையும் சுற்றி காட்டு. அவர் இதுக்கு முன்னாடி இங்க வந்ததே இல்லையே" என்றார் உற்சாகமாக. அவளும் ஒப்புக் கொண்டு அவனை அழைத்து சென்றாள்.
வீட்டை அவள் சுற்றி காட்டும் பொழுது, "இதுல உன் ரூம் எது?" என்று கேட்டவனை சோகமாக பார்த்தாள் அவள். எதை தன் அறையென சொல்வது, அவளுக்கென்று அங்கு அறைகள் எதுவும் இருந்தால் தானே அதை காண்பிக்க முடியும்.
![](https://img.wattpad.com/cover/244999232-288-k434183.jpg)
ВЫ ЧИТАЕТЕ
என் வாழ்வின் சுடரொளியே!
Любовные романыஅழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து த...