இளஞ்சிவப்பு வண்ண பட்டு சேலை உடுத்தி அளவான ஒப்பனை செய்து பார்பதற்கு தேவதை போல் இருந்தாள் இளமதி. ராதாவே அவளை அலங்கரித்தாள். அனைத்து அலங்காரமும் முடித்து அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தவள் விழிகள் மின்னின.
"ரொம்ப அழகா இருக்க" என்று கூறி அவளுக்கு நெட்டி முறித்து, அவள் கன்னத்தில் ஒரு திருஷ்டி பொட்டும் வைத்து விட்டாள்.
"முகம் அழகா இருக்கு, ஆனா புன்னகை இல்லாம அழகு முழுமை பெறவே இல்ல" என்று கூறி அவள் அருகில் அமர்ந்து அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள்.
செயற்கையாக ஒரு புன்னகையை அவள் முகத்தில் வரவழைத்து கொண்டாள் இளமதி.
அவள் சம்மதம் சொன்ன மறு வாரமே அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவள் மாமா காத்திருந்தார் என்று அவளுக்கு அன்று தெரியவில்லை.
"ஒரு வாரமா இருந்தா என்ன, ஒரு மாசமா இருந்தா என்ன, எப்படியும் மாமா பார்த்த மாப்பிள்ளையை தானே திருமணம் செய்து கொள்ள போகிறோம்" என்று எண்ணி அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ராதா மட்டுமே அவளுடன் இருந்தாள். அவள் மாமாவும், ரகுபதியும் கோவிலுக்கு சென்று திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தனர்.
"இன்னும் பத்து நிமிஷத்துல கார் வந்து விடும், நாம அங்க போக" ராதா கூற, இளமதி தலை அசைத்தாள்.
அவர்கள் பேசிக் கொண்டு இருந்த சமயம், நடுத்தர வயது பெண் ஒருவர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். "நீ தான் இளமதியா கண்ணு?" அவர் பாசமாக வினவினார்.
அவர் யாரென்று தெரியாமல், அவளும் குழப்பமாக ஆம் என்று தலை அசைத்தாள்.
"என் ராசாத்தி! எம்புட்டு அழகா இருக்க!" என்று கூறி அவளுக்கு நெட்டி முறித்தார்.
"என்னது ராசாத்தியா? ஒரு வேளை உன் அத்தையோட ஆளா இருப்பார்களோ? உன்ன கடத்திட்டு போக கூட வந்திருக்கலாம்" என்று இளமதியின் காதில் ராதா கிசுகிசுத்தாள். அதை கேட்டு இளமதிக்கு சிரிப்பு வந்தது, வாய்விட்டு சிரித்து விட்டாள்.
KAMU SEDANG MEMBACA
என் வாழ்வின் சுடரொளியே!
Romansaஅழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து த...