சுடர் - 31

1.7K 68 6
                                    

"என்ன சொல்லுறீங்க மாமா? என் பேர்ல இல்லைனா வேறு யார் பேர்ல இந்த சொத்தெல்லாம் இருக்கு?" என்றாள் குழப்பமாக.

"உன் அப்பா எழுதி வைத்த உயில் படி, இந்த சொத்து எல்லாம் உன் குழந்தைக்கு தான் சொந்தம். உனக்கு திருமணம் ஆன பிறகு நீயும் உன் கணவனும் இந்த சொத்துக்களை நிர்வாகிக்கலாம் ஆனா எதையும் யாருக்கும் தானமாக கொடுக்கவோ விற்கவோ முடியாது.

உன் குழந்தை பிறந்து அதற்கு பதினெட்டு வயசு பூர்த்தி ஆனா தான் இந்த சொத்துக்களை நீங்க விற்க முடியும், அதுவும் குழந்தை விருப்பப்படி தான். மற்றபடி உங்களுக்கு இத விற்க எந்த உரிமையும் இல்ல" என்று அவர் கூறியதைக் கேட்டு ராசாத்தி வாயை பிளந்தாள்.

இளமதிக்கும் அது ஆச்சரியமே, இப்படி ஒரு விவகாரம் இருக்கும் என்று அவளும் நினைக்கவில்லை.

பரிதி சிந்தித்தான், இந்த அப்பாக்கள் அனைவரும் ஏன் ஒரே மாதிரியான எண்ணங்களையே வைத்திருக்கிறார்கள்? அவன் தந்தையும் அவ்வாறான ஒரு சிக்கலான உயிலை தான் எழுதி வைத்திருந்தார். இங்கு இளமதியின் தந்தையும் அதையே செய்திருக்கிறாரே என்று தோன்றியது.

ஆனால் அவர் தெரிந்தோ தெரியாமலோ மிகவும் நல்ல காரியம் செய்திருக்கிறார். அவர் கடினமாக உழைத்து சம்பாதித்ததை இந்த ராசாத்தி போன்ற ஒரு பெண் சுலபமாக அபகரித்து கொள்வது எந்த வகையிலும் நியாயமானது இல்லை. எனவே அவரின் முடிவு மிகவும் சரியானது என்று எண்ணி மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான்.

ஐயோ! என்று கதற வேண்டும் போலிருந்தது ராசாத்திக்கு. அவள் கணவனை கண்களால் எரித்து விடுவதை போல் பார்த்தாள். ஆனால் அவர் அதை எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார்.

"உன் குழந்தைக்கு தான் இந்த சொத்து பற்றி முடிவெடுக்கும் உரிமை இருக்கு மா. இப்போ வரைக்கும் என்னென்ன வரவு செலவு இருந்ததுனு நீ உன் அத்தை கிட்ட எந்த கணக்கும் கேட்கல, ஆனா நாளைக்கு உன் பிள்ளையும் உன்ன மாதிரி இருக்காது கண்ணு!

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now