சுடர் - 12

1.8K 71 17
                                    

அவளை சுற்றி நடப்பது எதுவும் புரியாமல் குழப்பமாகவே அன்றிரவு உறங்க சென்றாள் இளமதி.

மறுநாள்,

"மாமா! நான் கூட உங்கள என்னவோனு நினைச்சேன். ஆனா நீங்க இந்த கல்யாணத்தை நடத்தி வச்சதுக்கு இவ்வளவு பெரிய காரணம் இருக்குனு இப்போ தான் எனக்கு தெரியுது" உற்சாகமாக வந்த பரிதியை பார்த்து அவருக்கு குழப்பமாக இருந்தது.

"நீ என்ன பேசுற?" அவர் கேட்க, "அதான் பிரச்சனை செஞ்சவங்க கிட்ட இருந்து நிலத்தை வாங்கிட்டேமே! அதை பற்றி தான் சொல்லுறேன்.

வேறு யாருக்கும் அந்த நிலத்தை அவுங்க கொடுக்க மாட்டாங்கனு தெரிஞ்சு, அவுங்களுக்கு சப்போட்டா பேசின பொண்ண எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சு, இப்போ அவ பேரிலேயே நிலத்தை வாங்கி என்ன நீங்க ஜெய்க்க வச்சிருக்கீங்க" அவன் புன்னகையுடன் பதில் அளித்தான், அவர் முகம் மாறியது.

"இப்பவும் நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட பரிதி. நான் ஏற்கனவே சொன்னது போல, விவசாய நிலங்கள் எதையும் நீ தொழிற்சாலை கட்ட நான் அனுமதிக்க மாட்டேன். இந்த நிலத்தை நம்ம வீட்டுக்கு வந்து மருமகள் பேர்ல வாங்குனதுக்கு காரணம், அதை அவ பாதுகாப்பா பார்த்துப்பானு நம்பி தான்.

இது அவளுக்கு நம்ம குடும்பத்தின் சார்பில் கொடுக்கும் திருமண பரிசு" அவர் கூறிய பதிலை கேட்ட பரிதியின் முகம் கறுத்தது. அவனுக்கு அவள் மேல் இருந்த கோபம் அதிகரித்தது, இந்த நிலம், பணத்துக்கு ஆசைப்பட்டு தான் நிச்சயமாக அவள் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கனும் என்று எண்ணி அவள் மேல் இருந்த வெறுப்பு அதிகரித்தது.

சுந்தரம் வீட்டிற்கு வந்தால் அவரிடம் பரிதி பேசியதை பற்றி கேட்டு தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் என்று இளமதி மனதில் எண்ணி இருந்தாள். ஆனால் அன்று காலை அவர் வராததால் அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

மதிய உணவு செய்ய அவளும் அங்கிருந்தவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தாள். அப்பொழுது சுந்தரத்தின் குரல் கேட்டு வேகமாக வெளியே வந்தாள்.

என் வாழ்வின் சுடரொளியே!Où les histoires vivent. Découvrez maintenant