16 ❤

316 32 6
                                    

பிரதாப் தான் நல்லவன் என்பதாக காட்டிக்கொள்ள திவ்யாவின் பள்ளி வாயிலில் நின்றுகொண்டு.. “மன்னிச்சுக்கோ.. நான் திருந்திட்டேன்..” என அவள் பின்னாலே வருவான்.

ஆனால் திவ்யா அவனை திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிடுவாள். இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அவன் அப்படி என்ன செய்து விடுவான் என்ற அலட்சியத்தில் திவ்யா அதை யாரிடமும் சொன்னதுமில்லை.

மன்னிப்பு கேட்டு.. திருந்தியதாக காட்டிக் கொண்டால் திவ்யா நம்பிவிடுவாள்.. தன்னுடன் வந்துவிடுவாள்.. என எண்ணினான் பிரதாப்.

ஆனால் திவ்யா அவனை நம்பாதது மட்டுமின்றி.. அவன் கெஞ்சி நிற்கும்போது.. கெஞ்சுவதாக காட்டிக் கொண்ட போது அலட்சியத்துடன் நடந்து கொண்டது அவன் கோபத்தை அதிகப்படுத்தியது.

கௌசிக்கும் அவள் வீட்டுக்கு திரும்பும் அதே பாதையில் மட்டுமே வருவதால் அவனுக்கும் இது தெரியாது.

அன்றும் திவ்யா பள்ளியில் இருந்து வெளியே வந்ததும் பிரதாப் அவளிடம் வந்து பேசினான்.

“நான் தான் பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்ல.. வா நம்ம வீட்டுக்கு போகலாம்..” என அவள் கையை பிடித்தான்.

சட்டென்று அவன் கையை உதறினாள் திவ்யா. அவனிடம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால்.. அமைதியாக கடந்து செல்லவே நினைத்தாள்.

ஆனால் பிரதாப் அவளை விடுவதாக இல்லை. வழிமறித்து நின்றான்.

“உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்.. பெரிய இவ மாதிரி போய்ட்டு இருக்க..” என்றான் பிரதாப்.

“தேவையில்லாம பிரச்சனை பண்ணாத.. வழியை விடு..” பல்லை கடித்தபடி சொன்னாள் திவ்யா.

“எனக்கு ஒரு முடிவை சொல்லாம நீ இன்னைக்கு இங்க இருந்து கிளம்ப முடியாது..” என அழுத்தமான குரலில் சொன்னான் பிரதாப்.

“ப்ச்.. என்ன முடிவு சொல்லணும்.. உன்னை மாதிரி ஒருத்தனோட வாழ்றதுக்கு பதில் சாகலாம்.. வழியை விடு..” என்றாள் திவ்யா எரிச்சலுடன்.. தான் சொல்லும் வார்த்தைகள் தனக்கே எதிராக திரும்பும் என்பதை உணராமல்.

தித்திக்குதே..Where stories live. Discover now