09 ❤

348 34 10
                                    

திவ்யா வேலை முடிந்து வந்ததும் அவளிடம் பேசிக் கொண்டு தையல் கற்றுக் கொள்வது பூர்ணிமாவின் வழக்கமாக இருந்தது.

திவ்யாவிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. எதுவோ ஒன்று அவள் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தவிப்பதை பூர்ணிமாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

என்னவென கேட்டாள் திவ்யாவிடம். ஒன்றுமில்லை என அவள் சொன்னாலும் அது உண்மையில்லை என்பது தெளிவாகவே புரிந்தது பூர்ணிமாவுக்கு.

அதைத்தான் அபிஷேக்கிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“திவ்யா முகமே சரியில்லை.. இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கா..”

“ஏன்.. என்னாச்சு..”

“தெரியலைங்க.. நானும் கேட்டு பார்த்துட்டேன்.. திவ்யா சொல்லவே மாட்டிக்குறா.. ஏதோ பிரச்சனை.. அவ முகத்தை பார்த்தாலே தெரியுது..”

“அவன் ஏதாவது பிரச்சனை பண்ணானா..”

“நானும் முத அப்டித்தான் நினைச்சேன்.. அந்த வீணா போனவன் தான் ஏதோ பண்ணிருப்பானோனு.. இல்லைன்னுட்டா.. ஆனா என்னன்னு சொல்லவும் மாட்டிக்குறா..

எனக்கு அவளை அப்டி பார்க்க கஷ்டமா இருக்கு..” என சொல்லிக் கொண்டிருந்தவள் அப்போதுதான் தன்னையே பார்த்தபடி நின்றிருந்த கௌசிக்கை கவனித்தாள்.

பூர்ணிமா லேசான தயக்கத்துடன் புன்னகைத்தாள்.

கௌசிக் அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருப்பதை தவறாக எடுத்துக் கொள்வாளோ என்ற தவிப்பில்.. “சா.. சாரி.. நா.. நான்..” என தடுமாறினான்.

“உங்க அண்ணன்கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்.. பேசுறீங்களா..” என பூர்ணிமா கேட்க.. மறுத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

பூர்ணிமாவும் தன்னறைக்குள் வந்தாள். சில நிமிட மௌனத்திற்கு காரணம் என்னவென அபிஷேக் கேட்டான்.

“கௌசிக் வந்ததை இப்பத்தான் கவனிச்சேன்.. நான் ஒன்னும் நினைக்கலை.. எதுவும் தப்பா எடுத்துட்டேனோனு சாரி கேட்டாரு..

தித்திக்குதே..Donde viven las historias. Descúbrelo ahora