07 ❤

363 31 8
                                    

வசீகரனுடன் கடையில் அமர்ந்தபடி.. கௌசிக் பேசிக் கொண்டிருந்தான்.

“அண்ணனுக்கு இங்கே செட்டிலாகுறதுல இன்ட்ரெஸ்ட் இல்ல.. இப்ப இங்கே இருக்கலாம்னு ஆசைப்படுறான்.. அண்ணிக்கும் பிடிச்சிருக்கு.. ஆனா வேலையையும் விடமுடியாதுனு யோசிக்கிறான்..

நானும் வேலை இல்லாம இருக்கிறதால தான் இதெல்லாம்.. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சா ஒன்னுமே தோணமாட்டிக்குது..” என்றான் கௌசிக்.

“ஒரு வாரம் தானடா ஆகுது.. கொஞ்ச நாள் போகட்டுமே..” என்றான் வசீகரன்.

“நானும் அப்டிதான்டா நினைச்சேன்.. ஆனா.. அண்ணன் மட்டும் தனியா அங்க இருக்க வேண்டியிருக்கே.. ஏதாவது பண்ணலாம்னா.. என்ன பண்றதுனே புரியலை..”

“கடையில அவ்ளோ வருமானம் இல்லையே.. யோசிச்சு யோசிச்சு செலவு பண்ற மாதிரி இருக்கு.. ஏதாவது தொழில் பண்ணலாம்னு தான் நானும் நினைக்கிறேன்..” என்றான் வசீகரன்.

இருவரும் அது செய்யலாமா.. இது செய்யலாமா என சிலவற்றை ஆலோசித்தனர். இருவருக்குமே மனம் ஒப்பவில்லை.

“வசீ.. நமக்கு தான் இந்த கடை இருக்கே.. இதையே பெரிசாக்குனா என்ன..” என கேட்டான் கௌசிக்.

“முன்னாடிலாம் கொஞ்ச பரவாயில்லாம வருமானம் வரும்டா.. இப்ப அவ்ளோ இல்லை.. இதுல இதை பெரிசு பண்ணி என்ன பண்ண..”

“நான் சூப்பர் மார்க்கெட் மாதிரி பண்ணலாம்னு சொல்றேன்.. ஆனா இங்கே வேண்டாம்.. வேற எங்கையாவது கடையை மாத்தலாம்..” என தன் எண்ணத்தை விளக்கினான்.

“சரிதான்.. ஆனா மெயின்ல கடை வைச்சாதான் வியாபாரம் இருக்கும்..”

“ஏதாவது கடை வாடகைக்கு கிடைக்குமானு விசாரிக்கலாம்..” என்றான் கௌசிக்.

தன் அப்பாவின் தொழில்.. சிறு வயதில் இருந்தே தனக்கும் பழக்கம்.. அதையே பெரிய அளவில் செய்வாதானால் வசீகரனுக்கும் விருப்பமே.. முதலீடு குறித்தும் யோசிக்க வேண்டும்.. முதலில் கடை வாடகைக்கு கிடைக்குமா என்பதை குறித்து விசாரிக்கலாம் என வசீகரனும் கௌசிக்கும் முடிவு செய்தனர்.

தித்திக்குதே..Where stories live. Discover now