24 ❤

283 23 1
                                    

மேகலா பேச தொடங்கிய போது அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல சாப்பாட்டில் தான் கவனமாக இருந்தான் கௌசிக்.

ஆனால் அவர் பேசிய விஷயத்தில் திகைத்து அவரை பார்த்தான் கௌசிக்.

கௌசிக் எதுவும் பேசாத போதிலும்.. “அம்மா நீங்க என்ன பேசுறீங்க..” என்றான் அபிஷேக்.

“என்னடா.. உனக்கு கல்யாணம் முடிச்சாச்சு.. அடுத்து அவனுக்கும் கல்யாணத்தை பண்ணிட்டா நான் நிம்மதியா இருப்பேன்.. அவனுக்கு என்ன.. நல்லா சம்பாதிக்கிறான்.. அதுக்காகவே பொண்ணு கொடுக்க நீ நான்னு போட்டி போடுவாங்க..” என்றார் மேகலா கௌசிக்கின் மனதில் இருப்பதை அறியாதவர் போல.

அந்த உரையாடலை கேட்டபடியே வீட்டுக்குள் வந்த கிருஷ்ணன்.. “நான் நேத்து பேசினது எதுவும் உனக்கு புரியவே இல்லையா..” என்றார் மேகலாவை பார்த்து.

“புரிஞ்சுது.. எல்லாம் நல்லாவே புரிஞ்சுது.. நான் அந்தப் பொண்ணை எதாவது சொன்னேனா.. அவ ரொம்ப நல்லவ.. அவளை மாதிரி நல்ல பொண்ணு இந்த உலகத்துலே இல்லை போதுமா..

ஆனா என் பையன் அவளை கட்டிக்க நான் சம்மதிக்க மாட்டேன்.. அவ இன்னொருத்தனோட..” என மேகலா சொல்லிக் கொண்டிருக்கையில் குறுக்கிட்டான் கௌசிக்.

“போதும் நிறுத்துங்க.. நான் ஏற்கனவே என்னோட முடிவை சொல்லிட்டேன்.. இனிமேலும்.. நீங்க இப்டியே தான் பேசிட்டு இருப்பீங்கனா பேசிட்டே இருங்க.. நீங்க நினைக்கிற எதுவும் நடக்காது..” என்ற கௌசிக் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

“ஏன் நடக்காது.. நடக்கும்.. கண்டிப்பா நடக்கும்..” என மேகலா சொல்ல.. அது காதிலே விழாதவன் போல சென்றான் கௌசிக்.

வீட்டில் நடந்த வாதங்களின் சுவடு சிறிதும் முகத்தில் இன்றி திவ்யாவை பார்க்க சென்றான் கௌசிக்.

“கௌசி.. கௌசி..” என்ற ஆதியின் உற்சாகமான குரல் கேட்டு.. புன்னகையுடன் கிச்சனில் இருந்து வந்தாள் திவ்யா.

“வரவேற்பு லாம் பலமா இருக்கு..” என்றான் கௌசிக் குறும்பு புன்னகையுடன் அவள் கைகளில் இருந்த தோசைக் கரண்டியை விழிகளால் சுட்டிக் காட்டியபடி.

தித்திக்குதே..Where stories live. Discover now