20 ❤

236 25 1
                                    

கிருஷ்ணன் பேசிய பிறகு மேகலா எவ்வளவு யோசித்த போதும்.. திவ்யாவின் குழந்தையை கௌசிக்கின் குழந்தையாக ஏற்றுக்கொள்ள அவரால் முடியவில்லை. அதையே சிந்திக்க சிந்திக்க திவ்யா மீது இனம்புரியாத வெறுப்பு பரவியது அவர் மனதில்.

சந்திரசேகரிடம் ரேவதி தன் மனதில் தோன்றிய எண்ணத்தை பற்றி பேசினார்.

“நம்ம திவ்யாவை நினைச்சா கவலையா இருக்கு ங்க..” என தொடங்கினார் ரேவதி.

“ம்.. பாவம் அவ.. கஷ்டம் மேல கஷ்டமா வந்துட்டு இருக்கு.. எப்பத்தான் அவளுக்கு நிம்மதி கிடைக்க போகுதோ..” என வருந்தினார் சந்திரசேகர்.

“எனக்கு ஒரு விஷயம் தோணுதுங்க..” என லேசாக தயங்கினார் ரேவதி.

“சொல்லு மா என்ன விஷயம்.. முன்னாடியே திவ்யாவை நம்ம வசீக்கு கேட்கலாம்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன்.. ஆனா என்னென்னமோ நடந்துடுச்சு.. இ.. இப்ப..”

அவர் தயக்கத்தை புரிந்து கொண்டவர் போல.. “இப்பவும் அதேதான் தோணுது.. அப்டித்தானே..” என சந்திரசேகர்.கேட்க ஆமென தலையசைத்தார் ரேவதி.

“நம்ம மட்டும் ஆசைப்பட்டு என்ன பண்ண.. பிள்ளைங்க மனசுல என்ன இருக்கோ..” என சந்திரசேகர் சொல்ல.. “நான் வேணா வசீ கிட்ட பேசி பார்க்கவா..” என ஆவலாக கேட்டார் ரேவதி.

தன் கணவர் சம்மதம் சொன்னதும்.. வசீகரன் எப்போது வருவான் அவனிடம் பேசலாம் என காத்திருந்தார். வசீகரன் இப்போதெல்லாம் கடையில் இருந்து வெகு தாமதமாக வருகிறான். கடையில் வேலை அதிகம் என நினைத்து ரேவதியும் எதுவும் கேட்கவில்லை.

அதே எண்ணத்தை தான் சுபாவும் சுரேந்தரிடம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“இன்னும் தூங்கலையா சுபா..” என சுரேந்தர் கேட்க.. “தூக்கம் வரலைங்க.. அண்ணன் வந்துடட்டும்.. அவன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்..” என்றாள் சுபா.

“திவ்யா விஷயமா..” என சுரேந்தர் கேட்க ஆமென தலையசைத்தாள் சுபா.

“எனக்கு திவ்யாவை இப்டி பார்க்கவே கஷ்டமா இருக்குங்க.. நம்ம அவளுக்கு தைரியம் சொல்லப்போனா.. எல்லாம் சரியாகிடும்னு அவ நமக்கு நம்பிக்கை சொல்லுவா.. ஆனா இப்ப என்ன நடக்குதுன்னே தெரியாம.. அவ இருக்கா.. கஷ்டமா இருக்கு..” என்றாள் சுபா.

தித்திக்குதே..Where stories live. Discover now