11 ❤

341 30 5
                                    

திவ்யா இப்போது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் என்றாவது ஓர் நாள் தன் நேசத்தை புரிந்து கொள்வாள் என நம்பினான் கௌசிக்.

வசீகரனிடம் தான் திவ்யாவை நேசிப்பதையும் அவளிடம் அந்த நேசத்தை வெளிப்படுத்தியதையும் சொல்லிவிட நினைத்தான் கௌசிக்.ஆனால் சொல்லும் தைரியமும் வரவில்லை.. நேரமும் வாய்க்கவில்லை.

தன் நண்பனுக்கு துரோகம் இழைப்பதாக உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்தது. அதுமட்டுமின்றி திவ்யா குழந்தையை அழிக்கும் எண்ணத்தை கைவிட்டாளா என்பதையே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

தொழில் தொடங்கலாம் என்ற பேச்சை தொடங்கியதே கௌசிக் தான். வசீகரனுக்கு அதில் ஓரளவு அனுபவம் இருந்தது. அவன் மூலமாக எல்லா விஷயங்களையும் ஆர்வமுடன் கற்றுக் கொண்டான் கௌசிக்.

அந்த ஆர்வம் இப்போது தொலைந்திருந்தது.. மனதில் இருந்த குழப்பத்தினால். கடைக்கு என்ன பெயர் வைப்பது என்ற ஆலோசனையின் போது கூட அவன் பெயருக்கு தான் கலந்து கொண்டான்.

கௌசிக் மனதில் எதையோ வைத்துக்கொண்டு தவிப்பதை வசீகரனால் புரிந்து கொள்ள முடிந்தது.

கடை திறப்பு விழா முடியட்டும்..அதன்பிறகு பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்தான் வசீகரன்.

திவ்யாவுக்கு அவள் மனநிலையையே புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் எந்த துன்பம் வந்தாலும்.. அதை திடமுடன் எதிர்கொள்வாள்.. அப்படியே உடைந்து போனாலும் அதற்கு தனிமையை தான் நாடுவாள்.

தன்னுடைய துன்பத்தை மற்றவர்களிடம் சொல்லி.. பரிதாபத்தையோ.. ஆறுதலையோ.. தேட மாட்டாள். இரண்டுமே தன் பிரச்சனைக்கு தீர்வை தராது.. அதற்கு தனிமையே மேல் என எண்ணுவாள்.

ஆனால் இப்போது ஏன் கௌசிக்கிடம் தன் மனதில் இருந்த குழப்பத்தை வெளிப்படுத்தினாள். தான் இருந்த குழப்பமான மனநிலையில் அது சரிதானோ.. என தோன்றியது.

அது எப்படி சரியாகும்.. நீ உன் பிரச்சனையை சொன்னதும்.. நான் இந்த குழந்தைக்கு அப்பாவா இருக்கேன்.. நான் உனக்கு வாழ்க்கை பிச்சை போடுறேன்னு.. உனக்கு இதெல்லாம் தேவையா..

தித்திக்குதே..Where stories live. Discover now