12 ❤

371 37 6
                                        

கௌசிக் மனதில் ஏதோ குழப்பம் இருப்பதாக தான் முதலில் எண்ணினான் வசீகரன். ஆனால் திவ்யாவும் கௌசிக்கும் பேசாமல் இருப்பதை கவனித்த பிறகு தான்.. இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சினை என புரிந்து கொண்டான்.

அது கௌசிக்கை இந்தளவு பாதிப்பது ஏன் என அறிந்து கொண்டு.. தன்னால் இயன்றவரை சரிசெய்து தன் நண்பனை எப்போதும் போல உற்சாகத்துடன் காண வேண்டும் என எண்ணினான் வசீகரன்.

அதனால் நேரடியாக கௌசிக்கிடமே.. “உனக்கும் திவ்யாவுக்கும் என்ன பிரச்சனை..” என கேட்டான் வசீகரன்.

அவன் கேள்வியில் முதலில் திகைத்தாலும்.. தன் மனதை வெளிப்படுத்த இதுவே சரியான தருணம் என எண்ணினான் கௌசிக்.

ஆனாலும் தயக்கத்துடனே.. “அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்..” என்றான் கௌசிக்.

வசீகரனுக்கு என்னவென்று புரியவில்லை.. இருந்தாலும்.. கௌசிக் என்ன கேட்க நினைக்கிறான் என்ற யோசனையோடு பார்த்தான்.

“சுபா உன்கிட்ட திவ்யாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டால்ல.. அதைப்பத்தி நீ என்ன நினைக்கிற..” என கேட்டான் கௌசிக்.

திவ்யா மீது தான் கொண்டிருக்கும் நேசத்தை சொல்வதா இல்லை தன் மனதிற்குள்ளே புதைப்பதானாலும் வசீகரன் மனதில் இருப்பதை அறிந்த பின்னர் முடிவு செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்தான் கௌசிக்.

கௌசிக்கிற்கும் திவ்யாவிற்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கும் தன்னிடம் சுபா திருமணம் குறித்து பேசியதற்கும் என்ன சம்பந்தம் என புரியாமல் விழித்தான் வசீகரன்.

வசீகரனின் குழப்பமும் மௌனமும் கௌசிக்கிற்கு தவிப்பை தந்தது. அவன் தவிப்பு புரிந்ததோ இல்லையோ.. ஆனால் அவன் கேள்விக்கு தான் பதில் சொல்லாதது உணர்வுக்கு வர.. தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்தினான் வசீகரன்.

“எனக்கு திவ்யாவை பிடிக்கும் கௌசி.. சின்ன வயசுல இருந்தே நான் அவளை பார்க்கிறேன்.. அவளை மாதிரி ஒரு பொண்ணு வாழ்க்கை முழுக்க வந்தா அதிர்ஷ்டம் தான்..” என்றான் வசீகரன்.

தித்திக்குதே..Donde viven las historias. Descúbrelo ahora