தன் மகளின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தான் அவளை அறைந்தார் கல்யாணி. திவ்யா அப்போதும் கோபத்துடன் பிரதாப்பை முறைத்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்ப்பதை கவனித்த கல்யாணி மகளை சமானதப்படுத்த முயன்றார்.
கௌசிக் வீட்டினரும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர். கௌசிக்கிற்கு என்ன பிரச்சனை என்பது புரிந்தது. திவ்யாவை பார்த்தபடியே நின்றிருந்தான்.
"என்னடா ஆச்சு.. எதுக்கு இப்டி பண்ற.. மாப்பிள்ளை கிட்ட இப்டியா நடந்துப்ப.. மன்னிப்பு கேளுடா.." என்றார் கல்யாணி கண்ணீருடன்.
"மன்னிப்பு கேட்கணுமா.. எதுக்கு.." கோபமாக வந்தது திவ்யாவின் வார்த்தைகள்.
என்னவென புரியாமல் கல்யாணியின் கண்ணீர் தான் அதிகமானது. அதைக்கண்ட திவ்யா.. "நீ ஏன்மா அழுற.. தப்பு பண்ண அவனே கல்லு மாதிரி நின்னுட்டு இருக்கான்.." என்றாள்.
"தப்பா.. நான் என்னடீ தப்பு பண்ணேன்.." என்றான் பிரதாப் கோபத்துடன்..
"அண்ணின்ற உறவு அம்மாவுக்கு சமம்னு சொல்லுவாங்க.. அவ கூடவே குடும்பம் நடத்துறீயே அதுக்கு பேர் என்ன.. வெக்கங்கெட்டவனே.. காலையில அவ.. இராத்திரிக்கு நானா.. ச்சே.. நினைச்சாலே அசிங்கமா.. அருவெறுப்பா இருக்கு.."என அவனை நிறுத்தாமல் அறைந்தாள் திவ்யா.
இத்தனை நாள் மறைத்தது இவளுக்கு எப்படி தெரிந்தது என அதிர்ந்தான் பிரதாப்.
சில நொடிகளில் சுதாரித்தவன்.. "ஆமா.. அதுக்கென்ன இப்போ.." அறைந்து கொண்டிருந்தவளை அலட்சியத்துடன் விலக்கினான் பிரதாப்.
"ச்சீ.. இதை சொல்ல வெட்கமா இல்லல உனக்கு.. போடா இங்க இருந்து.. உன்னை பார்த்தாலே.. ச்சே.." அருவெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
கிட்டத்தட்ட தெருவே வேடிக்கை பார்த்தது. இப்போது தான் எது செய்தாலும் சரிவராது என நினைத்த பிரதாப்.. திவ்யாவை முறைத்தபடி அங்கிருந்து கிளம்பினான்.
