06 ❤

561 32 9
                                    

கௌசிக் குடும்பத்தினர் தங்களின் சொந்த வீடு என்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் பக்கத்து வீட்டில் இருந்த திவ்யாவின் வாழ்வில் நடந்த சம்பவங்கள்.. அவர்களையும் பாதித்தது.

மனதளவில் தங்களின் சந்தோஷத்தை அவர்களால் முழுதாக அனுபவிக்க முடியவில்லை.

ஆனால் திவ்யாவின் தன்னம்பிக்கையால் விரைவிலே அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப.. அவர்களுடன் இயல்பாக பழகினர் கௌசிக் குடும்பத்தினர்.

வீட்டின் கட்டுமான வேலைகள் நடக்கும் போது கல்யாணியும் திவ்யாவும் செய்த உதவிகள் குறித்து கௌசிக் மூலமாக அறிந்திருந்தனர். அதனால் கௌசிக் குடும்பத்தினரால் அவர்களுடன் இயல்பாக நட்பு பாராட்ட முடிந்தது.

அபிஷேக்கின் ஒரு வார விடுப்பு முடிந்தது. நாளை முதல் வேலைக்கு செல்ல வேண்டும்..

முதலில் கௌசிக் சொந்த ஊரிலே தங்கப்போவதாக சொன்ன போது அதில் அபிஷேக்கிற்கு பெரிதாக உடன்பாடில்லை.

முன்பு சென்னையில் எத்தனையோ வீடுகளுக்கு மாறியிருக்கிறார்கள்.. எந்த வீட்டின் மீதும் ஏற்படாத ஒரு பற்று இந்த வீட்டில்.. அதுவும் இந்த ஒரு வாரத்திலே தோன்றியது.

சொந்த ஊர்.. சொந்த வீடு.. என்பதாலா என அபிஷேக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கே இருக்கலாம் என்ற எண்ணம் இப்போது தோன்றுகிறது. ஆனால் வேலை..

கௌசிக்கின் சேமிப்பும் பெரும்பாலும் கரைந்துவிட்டது. அப்பாவின் சேமிப்பில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கியாகிவிட்டது.

கௌசிக்கும் வீட்டின் வேலைகளை எல்லாம் தனியாளாக செய்து முடித்துவிட்டு இப்போதுதான் கொஞ்சம் ஓய்வாக இருக்கிறான். இப்போதே அடுத்து என்ன செய்யப் போகிறாய் என அவனிடம் கேட்பது முறையல்ல.. அப்படியே கேட்டாலும் கொஞ்ச நாள் போகட்டுமே என்பான்.

இந்த ஊர்.. இந்த வீடும் வேண்டும்.. வேலையும் முக்கியம்.. சரி இப்போது வேலையை பார்க்கலாம்.. கௌசிக் என்ன செய்வது என முடிவெடுத்து தொழில் ஏதாவது தொடங்கினால்.. அதன்பின் தானும் சேர்ந்து கொள்ளலாம்.. அந்த வேலை தேவையில்லை.. என்பது அபிஷேக்கின் எண்ணமாக இருந்தது.

தித்திக்குதே..Where stories live. Discover now