19 ❤

232 20 1
                                    

திவ்யா தான் என் மனைவி.. அவள் தான் என் வாழ்க்கை.. என கௌசிக் சொன்னது பூர்ணிமா எதிர்பார்த்தது தான். ஆனால் மேகலாவுக்கு திவ்யா மீதிருக்கும் வெறுப்பு அவள் எதிர்பாராதது.

இந்த ஊருக்கு வந்த நாள் முதலே திவ்யா நல்ல தோழி.. அவள் வாழ்வில் நடந்த பிரச்சனைகளுக்கு அவள் எந்தவிதத்திலும் பொறுப்பில்லை.

கௌசிக் அவள் செய்த உதவிகள் குறித்து எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்.. இவ்வளவு நாட்கள் திவ்யா நடந்து கொள்ளும் விதத்தை பக்கத்து வீட்டில் இருந்து பார்த்தும்.. அவள் மீது இத்தனை வெறுப்பை மேகலா சுமந்து கொண்டிருப்பது பூர்ணிமாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கௌசிக்கின் பேச்சு சற்று இதம் தந்தது. அவர்கள் கொண்டிருக்கும் காதலை அன்றுதான் நேரில் பார்த்தாள் பூர்ணிமா.

கௌசிக் தான் பேசியிருக்கிறான். திவ்யா இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை என்பதை பூர்ணிமா அறியவில்லை.

அபிஷேக்கிடம் மேகலா செய்தவற்றை சொல்லி புலம்பினாள் பூர்ணிமா. கௌசிக்கின் முடிவில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லையென்ற போதிலும்.. தன் அம்மா மேகலா திவ்யாவை தவறாக புரிந்து கொண்டுள்ளதால் தான் இந்த பிரச்சனை.. இதை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றான் பூர்ணிமாவிடம் ஆறுதலாக.

பூர்ணிமாவும் சரியென ஒப்புக் கொண்டாள். ஆனால் அன்றைய நிகழ்வுக்கு பிறகு மேகலாவிடம் இயல்பாக பேசுவதற்கு கூட அவளுக்கு ஒரு தயக்கம் இருந்தது.

திவ்யாவை பார்க்க வேண்டும் போலிருந்தாலும்.. அதற்கும் மேகலா ஏதாவது சொல்லுவாரோ என்ற தயக்கத்தில் செல்லாமல் இருந்தாள்.

அதை அபிஷேக்கிடம் சொல்லவும் செய்தாள். அதற்கு அவன்.. “அப்டிலாம் எதுவும் சொல்ல மாட்டாங்க.. நீ எப்பவும் போல திவ்யா கிட்ட பேசு..” என்று தான் சொன்னான்.

ஆனாலும் அபிஷேக்கும் இங்கே இல்லாத நேரத்தில் தனக்கும் மேகலாவுக்கும் பிரச்சனை வந்தால் சரியாக இராது என எண்ணி திவ்யா வீட்டுக்கு செல்லாமலே இருந்து விட்டாள்.

தித்திக்குதே..Unde poveștirile trăiesc. Descoperă acum