21 ❤

233 22 1
                                    

“நா.. நான் கௌசி கிட்ட தான் தனியா பேசணும்..” என விழிகளை தாழ்த்தியபடியே திவ்யா சொல்ல..கௌசிக் நம்ப முடியாமல் அவளை பார்த்தான். கவலைப்பட ஏதுமில்லை என்பதை புரிந்து கொண்ட வசீகரன் சிரிப்புடன் அங்கிருந்து வெளியேறினான்.

திவ்யா தன் நேசத்தை ஏற்றுக் கொள்வாள் என்று எந்தளவு கௌசிக் நம்பிக்கை கொண்டிருந்தானோ.. அதே அளவு வசீகரனும் அவர்கள் இருவரும் இணைய வேண்டும் என விரும்பினான். அது சீக்கிரமே நிகழப் போவதை புரிந்து கொண்டான்.

என்ன பிரச்சனையோ என்ற தவிப்பில் இருந்த கௌசிக்கால் அந்த எண்ணத்தில் இருந்து மீள முடியவில்லை.

“சொல்லு திவ்யா.. என்ன பிரச்சனை.. ஏன் இந்த நேரத்துல தனியா இங்க வந்துருக்க..” என தவிப்புடனே கேட்டான் கௌசிக்.

எங்கே தொடங்குவது.. எப்படி சொல்வது என புரியாமல் திவ்யா நின்றிருக்க.. “உட்காரு திவ்யா..” என அவளை அமர வைத்தவன்.. கொஞ்சம் தண்ணீர் எடுத்து கொடுத்தான்.

மறுக்காமல் குடித்தவள்.. தன் எதிரில் அமர்ந்திருந்த கௌசிக்கை பார்த்தாள். தன் கைகளை கோர்த்தபடி அவள் பதிலுக்காக காத்திருந்தான் கௌசிக்.

இந்த கரம்.. இந்த விரல்கள்.. தன் விரல்களுடன் பிணைந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் திவ்யாவின் மனதில் எழுந்தது.

“சொல்லு திவ்யா.. என்ன விஷயம்..” என மீண்டும் கேட்டான் கௌசிக்.

“அ.. அது.. வீ.. வீட்டில சண்டை போட்டீங்களா..” என கேட்டாள் மெல்ல.. என்ன சொல்ல வந்தோம் என்பதை மறந்தவள் போல சுற்றி வளைத்து தொடங்கினாள்.

பூர்ணிமா சொல்லியிருக்க கூடும் என எண்ணிய கௌசிக்.. ம்.. என்றான்.

“ஏ.. ஏன்..” என திவ்யா கேட்க.. பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தான் கௌசிக்.

“எ.. என்னால தான..” என்றாள் திவ்யா வருத்தம் தொனிக்க.

அவள் குரலில் இருந்த வருத்தம் அவனையும் வருத்த.. மௌனமாக இருப்பது சரியல்ல என்ற எண்ணத்துடன் பெருமூச்சொன்றை வெளியிட்டபடி பேச தொடங்கினான் கௌசிக்.

தித்திக்குதே..Where stories live. Discover now