அத்தியாயம் - 01

3.6K 65 10
                                    

"ஏய்... சும்மா இருக்க போறியா இல்லையா? எப்போ பாரு இந்த காயிலாங்கடை டப்பா மாதிரி லொட லொடன்னு பேசிகிட்டு.  நீ காக்காவா கரைஞ்சாலும், கொட்டானா கத்தினாலும் என் பதில் 'எனக்கு இப்போ டைம் இல்ல' என்று சொல்லும் தோழியை  கண்ணில் தீப்பொறி பறக்க பார்த்தாள் அந்த பெண்.  

"என்ன லுக்கு! அப்படியே கண்ணகி பரம்பர. கண்ணாலே மதுரையை எரிச்ச மாதிரி என்னை எரிக்க போறாக.  போவியா.  நானே நாளைக்கு போட வீடியோ இல்லன்னு கவலையில் சுத்திட்டு இருக்கேன்.  எங்கிட்ட வந்து நாளைக்கே ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணனும், செமினார் அட்டென்ட் பண்ணுனுமுன்னு கடுப்பு ஏத்திட்டு இருக்க.  இதெல்லாம் பண்ணிட்டா மட்டும் எனக்கு அரியர் இல்லாம போயிட போகுதா.  எட்டு அரியர் வச்சிருக்கேன்.  எத்தனை சொல்லு.  எட்டு.  ஒரு அரியர் வச்சாலே கேம்பஸ் இன்டர்வியூ கிடையாதுன்னு சொல்லிட்டு இருந்தாரு அந்த சிவபெருமான்.  அதுல நம்ம எட்டு அரியருக்கு எவன் தருவான் வேலை. அவன் தந்தாலும் எனக்கு வேண்டாம். நான்தான் வேலைக்கு போகாமலேயே லட்சத்தை தொட போறேனே! வழியை விடு.  எனக்கு ஏதாச்சும் கன்டன்ட் கிடைக்குதான்னு பார்க்கட்டும்." என்று கூறுபவளை விடாமல் மறிந்துக்கொண்டு நின்றாள் அந்த பெண்.  

அப்போது "ஏய் அமிர்த ஜோதி உனக்கு இன்னைக்கு சரியான வேட்டை.  சீக்கிரம் கேமராவை தூக்கிட்டு ஓடிவா" என்று தூரத்தில் நின்று ஒரு பெண் தலைபோற அவசரத்தில் கத்த 

"ஏய் பேதில போவா, செத்தவளே உனக்கு காலரா வந்து இழுத்துட்டு போவ.  என் மானத்தை வாங்கவே பிறந்திருக்கா.  என் அப்பாவுக்கு அடுத்த வல்லரக்கி இவ.  எத்தனை தடவ சொல்லணும் இவளுக்கு என் முழு பேரை சொல்லி கூப்பிட்டு என்னை கேவலப்படுத்தாதேன்னு.  என் கேமராவுக்கு வேலை தரதால உன்னை இன்னைக்கு கொல்லாம விட்டேன்.  இருடி சண்டாளி." என்று கோபத்தில் பல்லை கடித்துக்கொண்டு போனாள் ஜி பி முத்துவின் வழி தோன்றல்.  

"அமிர்த ஜோதி வாடி சீக்கிரம்.  அங்கே...." என்று இவளை அழைத்தவள் வெகு வேகமாக தொடங்க அவளை இழுத்து குனிய வைத்து முதுகில் சப்பு சப்பு என்று உள்ளங்கையை பொத்தி கொண்டு மொத்தினாள் அமிர்த ஜோதி.  

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now