அத்தியாயம் - 9

639 34 0
                                    

" வம்சி நான் உங்கிட்ட தனியா பேசணும்." என்றான் விஜயேந்திரன்.  அவன் இருக்கும் கடுப்பில் அடுப்பு இல்லாமலேயே தலபாக்கட்டி பிரியாணி ரெடி ஆயிடும் போல.  இது புரியாமல் சில்வண்டு அவனை குடைந்துக்கொண்டு இருந்தது.  

"பேசு... நீ பேசுறதை கேட்கத்தானே இப்படி வந்து இருக்கிறேன்." என்றாள் ஏஜே.  

"ஐய்யோ கடவுளே! இது என்ன சோதனை எனக்கு.  எனக்கு மட்டும் ஏன் ஊரில் போற ஏழரை எல்லாம் வந்து விடியனுமுன்னு எழுதியிருக்கு.  உதிரா இவளை இங்கே இருந்து கூட்டிட்டு போ.  போகும் போது ஏதாவது இனிப்பா வாங்கி அவ வாயை அடைச்சு வை.  பிரெஷர் இறங்கி பினாத்திட்டு இருக்கு அது." என்றான் விஜயேந்திரன் அவளை சமாளிக்க முடியாமல்.

"எனக்கு எதுவும் வேண்டாம்.  அதுவும் இவ கையாள வேண்டவே வேண்டாம்.  இப்படி ஒரு அம்சமான ஆளை லவ்வரா வச்சிகிட்டு, இந்த கருவாயன் சொல்றதுக்கு தலையை ஆட்டிட்டு இருக்கா.  நான் தனியாவே போவேன்.  பேசி முடிச்சிட்டு என்ன கூப்பிடனும்.  நான் தனியாத்தான் வந்தேன். என் வீட்டுல என்னை பத்திரமா கொண்டு போய் விட்டுட்டுத்தான் நீங்க எல்லோரும் வீட்டுக்கு போகணும்.  வம்சி சார் நீங்களாவது என்னை மறக்காம கூட்டிட்டு போங்க." என்று கூறிவிட்டு ஏஜே எழுந்து போக விஜயேந்திரன் உதிராவை பார்த்தான்.  

"நானும் போகனுமா?" என்று கேட்டாள் அவள்.  

"வேற அவளுக்கு துணைக்கு ஆள் வேண்டாமா?" என்றான் வம்சி சிரித்துக்கொண்டு.  

"அதுக்காக எல்லாம் இல்லை.  உங்கிட்ட நான் தனியா பேசணும் அதுக்காகத்தான் போக சொல்றேன்." என்றவன் திரும்பி பார்த்தான்.  காதில் இயர் போனை மாட்டிக்கொண்டு வெயிட்டிங் பிளேசில் இருந்தாள் ஏஜே.  அவன் கண்ணில் இருந்தது என்ன என்று உதிரா பார்த்தாள்,  கண்டுக்கொண்டாள்.  இரவு நேரம்.  ஹோட்டல் டீசண்டானது என்றாலும் அங்கே வந்து போகிறவர்கள் எல்லோரும் டீசண்டா இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்.  அதிலும் ஏஜே க்கு இன்னும் இளமை வயது துள்ளல் அடக்கவில்லை.  எதுக்குமே அஞ்சாதவள்.  இப்போது அவளிடம் யாராவது வந்து லேசாக வம்பு செய்தால் உடனே கையை நீட்டும் குணம் கொண்டவள்.  எதையும் யோசிக்கும் திறன் அவளுக்கு இல்லை.  ஆட்டம், பாட்டம் என்ற வகையை சேர்ந்தவள்.  இப்போது கூட கேட்கும் இசைக்கு ஏற்ப உடலை லேசாக அசைத்துக்கொண்டு இருந்தாள். 

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now