அத்தியாயம் - 16

850 44 6
                                    

"ஒன்னுக்கு பத்து முறை யோசிக்கணும் இவனையெல்லாம் கல்யாணம் பண்ணிக்க.  என்ன பேச்சு பேசுறான்.  நான் என்னத்தை உடுத்தினால் இவனுக்கு என்ன? இதை காட்டினா இவனுக்கு என்ன? பல்லை உடைக்கணும்." என்று கோபத்தில் தானாக பேசிக்கொண்டே வெளியே வந்த ஏஜேக்கு அப்போதுதான் நினைவு வந்தது போல அவன் யாரென்று.  

"ஐய்யயோ அவசரப்பட்டுட்டோமோ! இவன்தான் வேணுமுன்னு நாமதானே பிடிவாதம் பிடித்தோம்.  இப்போ இப்படி நமக்கு கோபம் வந்தால் அவனுக்குத்தான் கொண்டாட்டமா போயிடும்.  இவன் இப்படித்தான்னு தெரிஞ்ச விசயம்தானே! எல்லாம் என்னை சொல்லணும்.  செருப்பால என்னை நானே அடிச்சிக்கனும்.  நடுரோட்டுல அடிச்சிகிட்டா நல்லாவா இருக்கும்?" என்று கேட்டுக்கொண்டவள் மீண்டும் விஜயேந்திரனை தேடி போனாள்.  

கதவை தட்டாமல் தள்ளிக்கொண்டு உள்ளே போய் நின்றாள்.  அப்போதும் அவன் கை அவன் கன்னத்தில்தான் இருந்தது.  

'பயப்புள ரொம்ப கோபத்தில் இருக்கு போல.  ஒருவேளை அடி பலமோ! வலிச்சிருக்குமா! நான் அடிச்சு வலிச்சா இவன் சரியான நோஞ்சானாத்தான் இருக்கணும்.  ஆனா ஆளை பார்க்க அப்படி தெரியலையே! சரி சமாளிப்போம்." என்றவள் 

"பிச்சிடுவேன் பிச்சி.  இடுப்பு தெரிஞ்சா அதை ஏன் நீ பாக்குற? உன் கண்ணு எதிரே நிக்குறவங்க கண்ணைத்தானே பார்க்கணும்.  இடுப்பை பாரு, முட்டியை பாரு, தலையை பாரு, உதட்டை பாருன்னு பழைய பஞ்சாங்கம் மாதிரி பேசிட்டு இருக்க.  நீயெல்லாம் சென்னையில் இருக்க லாயிக்கே இல்லை.  ஏதாச்சும் குக்கிராமம் இருக்கிறதான்னு போய் பாரு." என்று இவள் இன்னும் கோபத்தில் இருப்பது போலவே பேச 

"ஓஓ நீங்க சிட்டில இருந்தா ஏவாள் மாதிரி அலைவிங்களா? இந்த சிட்டியும் இந்தியாவுக்குள்ளதான் இருக்கு.  இந்தியாவுக்குன்னு பண்பாடு கலாச்சாரமுன்னு இருக்கு.  அதை கெடுத்துட்டு நாங்கதான் அல்ட்ரா மாடலுன்னு பீத்திட்டு திரிய வேண்டியது.  என்னை பாரு பாருன்னு எல்லாத்தையும் ஹைலைட் பண்ணி காட்டிட்டு, ஏன் பார்த்தன்னு கேள்வி வேற.  இப்போ எதுக்குடி திரும்பி வந்த?" என்று அவன் கோபத்தில் கேட்க 

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now