அத்தியாயம் - 24

503 37 0
                                    

"ஏண்டா அத்தான் இப்படியெல்லாம் பண்ணுற?" என்றாள் உதிரா இரவு வந்த விஜயேந்திரனிடம்.  

"என்ன பண்ணிட்டாங்க?" என்றான் அவன்.  

"ஏஜே போன் போட்டிருந்தா." என்றாள் உதிரா.  அப்போது அங்கே சுமித்ராவும் வந்துவிட உதிரா பேச்சை நிறுத்திக்கொண்டாள்.  

"என்ன பேச்சு போகுது இங்கே? நான் வந்ததும் என் மருமகள் வாயை மூடிகிட்டா? அப்படி என்ன விசயம் எனக்கு தெரியாமல்" என்றார் அவர். உதிரா தன் அத்தைக்கு எதுவும் தெரிய வேண்டும் என்று நினைக்கவில்லை.  ஆனால் விஜயேந்திரன்  எதையும் தாயாரிடம் மறைக்க நினைக்காததினால் பேசினான்.  

"அதுக்குள்ள உங்கிட்ட ஓதிட்டாளா!" என்றான்.  

"என்னடா பேசுக்கிறிங்க?" என்று சுமித்ரை கேட்க விஜயேந்திரன் தாயாரிடம் நடவற்றை சுருக்கமாக கூறினான்.  

"நீ எதுக்கு அவளை இப்பவே வெளியே கூட்டிட்டு போற. நாம சென்னையில் இருக்கிறதால எப்படியும் இருக்கலாமுன்னு அர்த்தம் இல்லை." என்றார் சுமித்ரை. 

"அம்மா சும்மா ஆளுக்கொரு நியாயம் பேசாதிங்க.  இந்த மருமகளை  மட்டும் அந்த வம்சி எப்போ நினைச்சாலும்  வந்து பார்த்துட்டு போறான், வெளியே கூட்டிட்டு போறான், வீட்டுக்கு கூட்டிட்டு போறான்.  நான் மட்டும் அவளை எங்கேயும் கூட்டிட்டு போக கூடாதா! கல்யாணத்துக்கு முன்னாடி அவட்ட எல்லாத்தையும் க்ளியரா பேசனுமுன்னு நினைச்சேன், கூட்டிட்டு போனேன். அவளை நான் கூட்டிட்டு போகாட்டி வேற யாரு கூட்டிட்டு போவா?" என்றான் மகன். 

"இப்பவே இந்த பேச்சு பேசுறியே நீ! இன்னும் இருக்கு காலம்" என்று சுமித்ரா கூற 

"வேணா நான் கல்யாணமே பண்ணிக்கல போதுமா?" என்றான் அவன்.  

"அதுக்குள்ளே இந்த பேச்சு பேசிட வேண்டியது.  சரி என்ன ஆச்சுன்னு சொல்லு" என்று சுமித்ரை பட்டென்று சமாதானக்கொடி ஏற்றிவிட்டார்.  இப்போதான் மகன் கொஞ்சம் மனுஷன் மாதிரி இருக்கான் என்று தோன்றியது அவருக்கு.  அப்பப்போ சினிமா பாட்டெல்லாம் வேறு பாடுகிறானே! இவருக்கு தெரிந்த மாற்றம் அவனுக்கு தெரியவில்லை, அதுதான் பிரச்சனை. 

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now