அத்தியாயம் - 12

586 36 1
                                    

தடியால் அடித்து கனிய வைக்கும் பழம் என்றுமே சுவை தராது.  அது தன் இயல்பில் இருந்து வேறு மாறுபட்டுவிடும்.  உண்ணும் கனிக்கே இதுதான் நிலை என்றால் ஒரு பெண்ணின் மனதை சொல்லவா வேண்டும்.  அவள் விருப்பத்துக்கு மாறாக செய்யப்படும் எந்த நல்லதும் அவளுக்கு கெடுதலாகத்தான் போய் முடியும்.  அதற்காக அவளை அப்படியே விட்டுவிட முடியுமா? என்ற கேள்வியோடு உதிராவை சுற்றி அனைவரும் அமைதியாக இருக்க விஜயேந்திரனுக்கு என்ன செய்வது என்று புரியாத நிலை.  ஏதாவது ஒரு பக்கம் அவள் சென்றுதான் ஆகவேண்டும் என்று நினைத்தான் அவன்.  இந்நாள் வரை இவன் பக்கம் மட்டும்தான் அவள் சாய வேண்டும் என்று நினைத்தான்.  ஆனால் அவள் மனதை ஓரளவுக்கு அறிந்த பிறகு தன் முடிவில் இருந்து பின் வாங்கினான்.  அதனால் நல்லதொரு தீர்வு வரட்டும் என்று கையை கட்டிக்கொண்டு அவனும் அமைதியாக இருக்க வம்சி அந்த சூழ்நிலையில் எழுந்து பேசினான்.  

உதிராவின் முடிவுக்கு ஒருவரும் சம்மதம் கூறாமல் இருக்க வம்சி எழுந்து அவள் அருகில் வந்தான்.  நிலத்தை பார்த்து தன் கண்ணீரை உதிர்த்தவளின் பொன் முகத்தை நிமிர்த்தியவன் அவள் கலங்கிய கண்களை ஆழமாக பார்த்தான்.  ஒரு நிமிடத்துக்கு மேலாக அவள் முகம் கண்டவன் 

"உன் விருப்பம் இல்லாமல் ஏதுவுமே நடக்காது.  என் பக்கம் நான் எந்த அளவுக்கு தயார் நிலையில் இருக்கிறேன்னு உனக்கு காட்டிவிட்டேன்.  இங்கே இருக்கும் எல்லோருக்கும் உன் கடந்த காலம் தெரியும்.  யாருக்குமே எதுவுமே மறைக்கப்படவில்லை. யாருக்கும் அது பெரிதாக தெரியவும் இல்லை. அதெல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறக்கப்படவேண்டிய பொல்லாத கனவுகள்.  மறக்கப்பாரு முடிந்து போனதை.  நினைக்க தொடங்கு உன் எதிரே நிற்கும் எதிர்காலத்தை. எனக்கு நீதான் எதிர்காலம்.  நீ தீர்மானிக்க போவது உன் எதிர்காலத்தை மட்டுமல்ல.  என் எதிர்காலத்தையும் இன்னும் சிலரது எதிர்காலத்தையும்தான்." என்றவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து  ஒரு சிறு டப்பாவை எடுத்தான். 

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now