அத்தியாயம் - 26

569 46 3
                                    

"ஏண்டி உனக்கு அழுகையே வரலையா உன் அம்மா, அப்பாவை விட்டுட்டு போறதுக்கு" என்று ஊர்மி கேட்டுக்கொண்டு இருந்தாள் ஏஜேவிடம்.  

"வருது" என்றாள் ஏஜே. 

"எங்கே? மாட்டு வண்டியிலா வருது.  வந்து சேர இவ்வளவு நேரம் ஆகுது.  உன்னை பெத்ததுக்கு உங்க அம்மா ஒரு உலக்கையை   பெத்துருக்கலாம்." என்றாள் ஊர்மி.  

"அப்படின்னா என்ன?" என்று பக்கத்தில் ஒருத்தி கேட்க 

"யாருக்கு தெரியும்? என் அம்மா என் அக்காவை பார்த்து அடிக்கடி அப்படி சொல்லுவாங்க. கூகுள் பண்ணி பார்ப்போம்" என்று அவர்கள் அங்கே பிஸியாகி போக ஏஜேவை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு போக அவளின் பெற்றோர் தயாராகினர்.  

"அம்மா ஜோதி நம்ம வீட்டில் இருந்தது போல இங்கே இருக்க கூடாது.  யாருக்கும் தொந்திரவு கொடுக்காமல் நல்ல பொண்ணா இருக்கணும்.  அம்மாவையும், என்னையும் படுத்தி எடுத்த மாதிரி யாருக்கும் தொந்திரவு கொடுக்க கூடாது சரியாடா." என்றார் ஏஜேவின் தகப்பன்.  

"சரிப்பா." என்றாள்  இவள் நல்ல பிள்ளையாக.  ஏஜேவின் பெற்றோருக்கு மகளைப்பற்றிய கவலையைவிட அவள் புகுந்த வீட்டில் இருந்தவர்களை நினைத்துதான் கவலை.  என்ன செய்வாளோ? என்ன பிரச்சனை செய்வாளோ? என்ன காரணம் சொல்லி சண்டைக்கு போவாளோ? முக்கியமாக எத்தனை நாள் இங்கே தாக்கு பிடிப்பாளோ என்ற ஏகப்பட்ட கேள்விகள் அவர்களுக்குள்.  மகளிடம் சொல்லிவிட்டு அவளை பெற்றவர்கள் மனது முழுவதும் கவலையுடன் அங்கே இருந்து கிளம்பினார்கள்.  

இரண்டு ஜோடிகளும் தங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறினார்கள்.  

வம்சி - உதிரா.  இரண்டுமே சாதுவானது குணத்தில்.  ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்கொள்ள நினையாதவர்கள்.  ஒருவர் மேல் ஒருவருக்கு பரஸ்பரம் மரியாதை உண்டு.  இரண்டுபேருக்குமே வாழ்க்கை கடினமான பாதையை காட்டி அவர்களை பக்குவப்படுத்தியிருந்தது.  சின்ன சின்ன காயம் எல்லாம் அவர்களை எதுவுமே செய்யாது. இதுதானே என்ற எண்ண போக்கு கொண்டவர்கள்.  

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें