எதிர் துருவம் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதுதான் உண்மை போல. விஜயேந்திரன் ஏஜேவின் பால் ஈர்க்கப்பட்டான் இன்று. முதலிரவு அன்று அமைதியாக வெண்பஞ்சு மேகம் போல இமையை மூடி துயில் கொள்ளும் மனைவி மீது அந்த மங்கிய வெளித்தத்தில் மங்காத காதல் உருவானது அவனுக்கு. அப்போதும் அவன் அதை காதல் என்றெல்லாம் கருதவில்லை. முதல் முதலில் அவனது பேச்சை எல்லாம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் கேட்டிருக்கிறாள் என்ற எண்ணத்தில் வந்த கனிவு என்றே நினைத்தான். அவளை பார்க்கும் போது ஒருவித கோபம் வருவதை இவனால் எப்போதுமே தவிர்க்க முடியாது. இன்று அது வரவில்லை. அவள் மீது அன்பு வந்தது. இவன் கொடுத்த மெல்லிய முத்தத்தில் திருப்திக்கொண்டு தூங்குபவள் மீது ஏனோ அவனுக்கு பாதி இரவு சென்ற பிறகு ஆசை பிறந்தது.
'இவள் மீது ஆசை இருந்தும் எதற்காக நான் நிதானிக்கிறேன்?" என்று அவன் தன்னை கேள்விக்கேட்டுக்கொண்டான் தூங்காமல் இருந்து.
'உன் அத்தை மகளை நினைத்து இருக்கலாம்' என்று அவன் மனம் அவனுக்கு பதில் கொடுக்க அதை அதிர்ச்சியோடு உணர்ந்தான் அவன்.
'இது எப்படி சரியாகும்? இந்த பெண்ணை ஏதோ ஒரு வழியில் நான் பாதித்து இருக்குறேன். அதனால்தான் அவள் என் மீது காதல் என்று வந்து நின்றாள். அதை அவளுக்கு நல்லவிதமாக புரிய வைக்க நான் தவறி போக அவள் தற்கொலை வரை சென்று என்னிடம் வாக்கு வாங்கினாள். இன்று என் மனைவியாக என்னருகில் இருக்கிறாள். இப்போது நான் உதிராவை நினைத்து, அவள் என்ன செய்கிறாளோ? அவள் இந்த திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்வாளோ என்றெல்லாம் நினைத்து இந்த பட்டாம்பூச்சியின் சிறகை பிய்த்து எரிய நினைக்கிறேனா? அப்படி நினைத்தால் அது எப்படி சரியாகும்? நான் செய்வது நியாயமாகுமா? ஒரு பெண்ணின் வாழ்க்கையை பார்த்து இன்னொரு பெண்ணுக்கு நான் துரோகம் செய்கிறேனா?' என்று தன்னையே கேள்விக்கேட்டு கொண்ட விஜயேந்திரனுக்கு அது தவறென்று பட பக்கத்தில் தூங்கிக்கொண்டு இருப்பவளை இழுத்து தன் மேலே போட்டான் வேகமாக.