அத்தியாயம் - 14

647 36 1
                                    

கலகம் பிறந்தால் நன்மை பிறக்கும் என்பார்கள்.   இன்று ஏற்பட்ட கலகத்தில் நன்மை விழைந்ததா? தீமைக்கு வழிவகுத்ததா என்று எவரவறிவார்கள்.  விஜயேந்திரன் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்து ஒரு முடிவுக்கு வந்தான். ஆனால் அதன் தொடக்கம் உதிரா கையில் இருந்தது.  அவளோ தன்னை எல்லோரும் நெருக்கிறார்கள் என்ற கோபத்தில் வெளியே போய் நின்றாள்.  அவளை தொடந்து சென்ற வம்சி கோபத்தில் நின்றவளை பார்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் நின்றான் அவள் எதிரில்.  

"என்ன அந்த பார்வை பாக்குற? நீயும் உள்ளே ஒருத்தி செய்தது போல தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டலாமுன்னு நினைச்சு கூட பார்த்திடாதே! எனக்கு இந்த மாதிரி பிரிவு எல்லாம் ரொம்ப சகஜம்.  இன்னும் இழக்க எங்கிட்ட எதுவுமே இல்லை.  நீ போனா நான் உன் பின்னாடி வருவேன் அவ்வளவுதான்.  நீ போகாதேன்னு பிடிச்சு எல்லாம் வைக்கமாட்டேன் நான்.  என் அத்தானை போல நான் ஒன்னும் பயந்தாரி இல்லை." என்றாள் உதிரா.  

"ஆமாம் ஆமாம். உனக்கு பயமுன்னா என்னன்னே தெரியாதுன்னு எனக்கும் தெரியும்.  ஆனா அம்மா ஒரு விஷயத்தை மறந்திட்டிங்க.  நான் போனா நீங்க என் பின்னாடி வந்திடுவிங்க, அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  அதே போல நீங்க இல்லாத உலகத்தில் உங்க அருமை அத்தை மகனும் இருப்பானா? அவன் உங்க பின்னாடி வருவான்.  அப்புறம் என்ன நடக்கும்? அவன் மேலே கிறுக்கு முத்தி போய் எதை திங்குரோமுன்னு தெரியாம டிசைன் டிசைனா மாத்திரையை வாங்கி முழுங்குறவ அவன் பின்னாடி வருவா.  இப்படியே மொத்தம் நாலு டிக்கெட் போய் சேர்ந்திடும்.  அப்புறம் அந்த நாலு பின்னாடி  எத்தனை ஜீவன்கள் வருமுன்னு யாருக்கு தெரியும்.  இப்படி மாறி மாறி மாறி செத்து செத்து விளையாலடாம்.  ஏன்னா நமக்கு முக்கியம் எப்பவோ நடந்து முடிந்த உன் கடந்த காலம்தானே! நீ இப்படியே இருக்கிறதால அதை மாத்தி எழுதிட முடியுமே!  உள்ளே போய் அவன்ட்ட சொல்லிட்டு வா.  உன்னை ட்ராப் பண்ணிட்டு நான் என் வேலையை போய் பார்க்கட்டும். " என்று கூறிவிட்டு தன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் வம்சி.

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now