அத்தியாயம் - 15

605 34 2
                                    

"பேசி முடிச்சிட்டியாப்பா?" என்று வந்த விஜயேந்திரனை கோபத்துடன் பார்த்தாள் உதிரா.  

"ஏண்டா அத்தான் எதுனாலும் சொல்லிட்டு போகமாட்டியா? திட்டம் தனியா போடுறியா? எனக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு.  நீ உன் ரூட்டை கிளியர் பண்ண என்னை தள்ளி விட பாக்குற. இதுக்கு  உனக்கு தண்டனை கொடுக்காமல் விடமாட்டேன். அத்தை பத்து தடவைக்கு மேலே கால் பண்ணிட்டாங்க.  வா போகலாம். எத்தனை முறை பேசினாலும் ஒரே பேச்சுத்தான்." என்று கூறிவிட்டு விஜயேந்திரனிடம் கிளம்பினாள் உதிரா.  போகும் வழியில் 

"அத்தான் ரொம்ப லவ்வோ??" என்று கேட்டாள் அவன் முகம் பார்த்து.  

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.  அவளை லவ் பண்ணுறவன் பைத்தியகாரனாத்தான் இருப்பான்." என்றான் விஜயேந்திரன்.  

"அதான் கேட்கிறேன், ரொம்ப லவ்வோன்னு." என்றாள் இவள்.  இவளை முறைத்தவன் 

"சாக போறேன்னு நிக்குறாளேன்னுதான் பார்த்தேன்." என்றான் விஜயேந்திரன்.

"அடேங்கப்பா, கருணை பிரபு இவரு.  உன் கதையை விடு, சரியான பொய்கள்ளன் நீ.  அவளைப்பற்றி பேசுவோம்.  அவளும் உன்னை போல பைத்தியகாரி போலையே!  இல்லன்னா உன்னை போய் காதலிப்பாளா? உங்கிட்ட சொல்லிக்கிற மாதிரி ஏதாச்சும் நல்ல குணம் இருக்கா? இந்த காக்கி சட்டையை போட்டு போட்டு உன் புத்தியும் இப்படித்தான் மாறிட்டு இருக்கு.  இதுவரைக்கும் வீட்டுல இருக்கிற யாரிடமாவது நீ அன்பா, பாசமா, நிதானமா பேசியிருப்பியா? எல்லாம் அடவாடித்தனம்தான்.  வாயை திறந்தால் ஒரு நல்ல வார்த்தை கூட வராது. எப்போ பாரு கையை உடை, முட்டுக்கு கீழே சுடு, லத்தியால் உதைன்னு தூக்கத்தில் கூட உளறிட்டு இருக்க.  இதுல என்கவுண்டர் வேற ரகசியமா ஆரம்பிச்சிருக்க.  உனக்கு நியாமுன்னு தோணிச்சின்னா எதுவும் பண்ணாம விட்டுடுவ, இல்லாட்டி ஏதாச்சும் பொய் கேசை போட்டாவது உள்ளே தள்ளிடுற.  நீ போலீஸ்க்காரன் கிடையாது, கட்டபஞ்சாயத்துக்காரன்.  நீயெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பொண்ணை என்ன பாடு படுத்த போறியோ? இது தெரியாமல் அந்த பைத்தியக்காரியும் நீதான் வேணுமுன்னு நிக்குறா." என்றாள் உதிரா சிரித்துக்கொண்டு.

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now