"இப்போ அவன் மருந்து போட்டுப்பானா என்ன?" என்று கேட்கும் தோழியை எந்த வித ஆச்சரியமம் இல்லாமல் பார்த்தாள் ஊர்மி. ஏனென்றால் இதுதான் அவளின் தோழியின் சிறப்பு. தனக்கு துன்பம் கொடுப்பவர்களுக்கு கூட நன்மை செய்யும் மனம் உடையவள். ஏஜே எம்.ஏ புவியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. இவளின் பெற்றோருக்கு இவள் ஐ ஏ எஸ் ஆக வேண்டும் என்று கனவு. அதுக்காகத்தான் இந்த படிப்பை தேர்ந்தேடுத்து கொடுத்தார்கள். ஆனால் இவள் அரியரிலே ஆகாயம் வரை சென்றவள். இரண்டு இலக்க எண்ணில் அரியர் வந்துவிட கூடாதே என்றுதான் எப்போதாவது புக்கை எடுப்பாள். அவளைப்பொறுத்தமட்டிலும் வராத படிப்பை வா...வா என்றால் அது எப்படி வரும் என்ற எண்ணம்தான்.
"இந்த கொக்கு தலையருக்கு ஆசையை பாரேன்!" என்பாள் சில நேரம்.
"யாருக்கிடி?" என்று கேட்டால்
"என் அப்பாவுக்குத்தான். நானெல்லாம் ஐ பி எஸ் படிச்சா நாடு தாங்குமா? எந்த ஊரில் பத்து அரியருக்கு குறையாமல் வைச்சிருக்கிறவளுக்கு ஐ பி எஸ் பட்டம் கொடுக்கிறார்கள்?" என்று கேட்டு சிரிப்பாள்.
உதவி குணம் படைத்தவள். இவள் யூ டியூபில் கிடைப்பதை எல்லாம் வீடியோவாக போடுவாள். அதற்காக இவளுக்கு பணம் வந்தாலும், சில நேரம் சின்னதும், பெரிதுமாக பிரச்சனைகளும் வரும். ஆனால் அது எதற்கும் அஞ்சாதவள் இவள். இது இவளுக்கு ஒரு பார்ட் டைம் ஜாப். ஆனால் இதைத்தான் ஃபுள் டைம் ஜாப்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறாள். இதில் இருந்து வரும் வருமானத்தில் பாதியை தேவைப்படுவோர்களுக்கு உதவியாக கொடுத்துவிடுவாள். அவளின் பேச்சு எல்லாம் ஒரு மாதிரியாக இருக்கும். ஆனால் பழகும் அனைவரிடமும் அன்பாகவும், அக்கறையாகவும் இருப்பவள். அதனால் இவள் பேச்சை கேட்டு எந்த அதிர்ச்சியும் ஆகாத ஊர்மி
"சார் உங்க கைக்கும் கொஞ்சம் ட்ரீட்மென்ட் பண்ணிக்கோங்க. காயம் கொஞ்சம் ஆழமாகத்தான் பட்டிருக்கு." என்றாள் ஊர்மி.
"அங்கே இருந்தே என் காயம் தெரியுதா உனக்கு? கண்ணில் எதுவும் ஸ்கேனர் இருக்குதா?" என்று கேட்டான் விஜயேந்திரன்.