அத்தியாயம் - 22

1K 53 9
                                    

பெண்கள் பலவிதம்.  அதில் ஏஜே என்ற அமிர்த ஜோதி புதுவிதம்.  எதற்கும் கலங்காதவளாக தன்னை உணர்ந்தவள்.  ஆனால் இப்போதும் என்பதற்குள் கண்ணீர் சாடும் அளவுக்கு பலவீனமாகிக்கொண்டு இருந்தாள்.  அதன் புகழ் எல்லாம் அவளை ஆண்டுக்கொண்டு இருந்த  காதலுக்கே சேரும்.  இந்த காதல் எப்போதுமே இப்படித்தான்.  இதனால் எத்தனை வீரமிக்க பெண் கோழையாகி வீணாகி போயிருக்கிறாள்.  இந்த காதலால் கோழையாகிய பெண் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறாள் மனைவியாக.  அந்த லிஸ்டில் இன்னும் ஒரு புது வரவு இந்த அமிர்த ஜோதி.  அந்த பெண்ணை எப்படி சாமாதானம் செய்தவது என்று தெரியாமல் உதிரா தவித்து போனாள்.  

நீண்ட கால தீர்வு என்னவென்று அவளுக்கு புரிந்து போனது.  அவளுடைய அத்தானை இந்த பெண்ணிடம் முழுவதுமாக சேர்த்துவிட வேண்டும்.  அப்போதுதான் இவர்களுக்கு இடையே இருக்கும் இந்த மாதிரியான பிரச்சனை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். ஆனால் அது அத்தோடு நிற்காதே! இன்று தனது மாமன்  மகளை மனதில் வைத்துக்கொண்டு நிச்சயம் செய்த பெண் பிடித்திருந்தாலும் அவளை எட்ட நிறுத்தியிருப்பவன், நாளைக்கு அவளை கரம் பிடித்துவிட்டு 'என் மாமன் மகள் வாழாமல் உன்னுடன் நான் வாழமாட்டேன்' என்று தள்ளி வைத்து வேதனைப்படுத்திட கூடாதே! அவன் நிச்சயம் செய்வான்.  மாமன் மகள் என்று வந்துவிட்டால் நீதி, நியாயம் எல்லாம் அவன் கண்ணுக்கு காணாமல் போய்விடும்.  இதை எப்படி தீர்ப்பது?  யாரிடம் சென்று முறையிடுவது? என்று யோசித்தவளுக்கு உடனே நினைவு வந்தவன் வம்சி.  

"ஏஜே கவலைப்படாதே! எல்லாம் சரியாயிடும்.  நான் அத்தானிடம் பேசுறேன். எல்லாம் நல்லப்படியா நடக்கும். உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சின்னா எல்லாம் நார்மலா ஆயிடும்.  அவனை நீ புரிஞ்சிப்ப.  அவன் நல்லவன்தான்.  ஆனால் ரொம்ப சின்ன வயசிலே சில பொறுப்பை சுமந்தவன்.  அதான் இப்படி இருக்கான். நீ அவனிடம் இருக்கிற நல்லதையும் கொஞ்சம் பார்க்கணும்.  நான் இதை சொல்லலாமான்னு தெரியல.  நீ ஓப்பனா பேசியதால நானும் சொல்றேன்.  நீ அவ்வளவு நேரம் கிஸ் பண்ணிய பிறகும் அவன் உன்னை தள்ளி விடலல்ல.  உன்னை பிடிக்காமல் இருந்திருந்தால் அப்படி இருந்திருப்பானா?" என்று உதிரா ஏஜேவை சமாதானம் செய்ய முயல 

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now