அத்தியாயம் - 28

1.1K 49 10
                                    

"விஜய் நீ ஹனிமூன் போகலையா?" என்று வம்சி கேட்க 

"ஏண்டா" என்றான் விஜயேந்திரன் உதிராவுடன் போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருக்கும் ஏஜேவை பார்த்துக்கொண்டு.  நல்லவேளை அவள் கேட்கவில்லை என்று நினைத்துக்கொண்டான்.  

"போகவேண்டாமா? உனக்கு ஆசை இல்லாட்டியும் அவளுக்கு இருக்கும்தானே!" என்று வம்சி கூற 

"அவ ஆசையை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சா, முதலில் நான் என் வேலையை விடனும்.  இப்போதைக்கு லீவே எடுக்க முடியாது.  மேரேஜ் முடிஞ்ச மறுநாளே போயிட்டுத்தான் வந்தேன்.  நீ சொந்த பிசினஸ் பண்ணுற, இஷ்டப்பட்ட நேரத்துக்கு போவ, வருவ.  என்னால அப்படி போக முடியுமா? கண்டிப்பா போவோம்.  ஆனா எப்போன்னுதான் தெரியல." என்றான் விஜயேந்திரன்.  

மறுநாள் இவன் அவசரமாக கிளம்பிக்கொண்டு இருக்க அவள் கட்டிலில் இருந்து எழும்பாமல் தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டு படுத்திருந்தாள்.  அவளை பார்த்தவன் 

"பூனை என்னவோ என் அம்மா உன்னை விட்டுட்டு இருக்காங்க.  இல்ல நீ இப்படி விடிஞ்ச பிறகும் தூங்குறதுக்கு பூசை விழுந்திருக்கும்." என்றான் விஜயேந்திரன்.  இவன் சொல்வதை அவள் கேட்கவே இல்லை.  அவள் அப்படியே அசையாம படுத்திருக்க சந்தேகத்துடன் அவளை திரும்பி பார்த்தான்.

"பூனை உடம்புக்கு ஏதாச்சும் செய்யுதா?" என்று கேட்டான்.  அவள் இல்லை என்பது போல தலையை ஆட்ட அத்தோடு விட்டுவிட்டான்.  அவள் பக்கத்தில் போய் நெற்றியை தொட்டு பார்க்க கூட அவனுக்கு பயம்தான்.  அவள் ஒரு நிலையில் இருக்கமாட்டாள். சில நேரம் அமைதியாக இருப்பாள், சில நேரம் ஏதாச்சும் குரங்கு சேட்டை செய்வாள்.  இவனுக்கு அவசரமாக வெளியே போகவேண்டியதிருந்தது.  இப்போது அவள் சேட்டையை தொடங்கிவிட்டால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்து அவன் கீழே சென்றுவிட்டான்.  

அங்கே ஏஜேவின் அப்பா, அம்மா அமர்ந்திருந்தார்கள்.  

"வாங்க மாமா, வாங்க அத்தை " என்று கூறிவிட்டு இவன் தாயாரை பார்க்க 

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now