அத்தியாயம் - 19

964 42 6
                                    

"எங்க கூட்டிட்டு போற? எப்போ வரும் இடம்? அங்கே என்ன இருக்கு?"இப்படி புதிதாக பேச படித்த குழந்தை கேள்வி கேட்பது போல இவள் பேசிக்கொண்டே வர அவன் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவே இல்லை. 

"திமிரு பிடிச்சவன்." என்று இவள் அமைதியாக இருக்க சற்று நேரம் சென்ற பிறகு பைக் ஒரு இடத்தில் நின்றது.  

"இறங்கு" என்றான் விஜயேந்திரன் பைக்கை நிறுத்திவிட்டு.  

"இங்கே என்ன இருக்கு? இந்த ஏரியாவே சரியில்லையே!" என்றாள் அவள் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு. 

"திருடனும், அயோக்கியனும் வெளிச்சத்திலா வேலையை பார்ப்பான்.  கேமிரா கொண்டு வந்திருக்கியா?" என்று கேட்டான் விஜயேந்திரன்.  

"கொண்டு வந்திருக்கேன்.  அது இல்லாமல் வருவேனா?" என்று அவள் அதை எடுத்து அவனிடம் காட்டா அதை அவள் கையில் இருந்து வாங்கிக்கொண்டான் விஜயேந்திரன்.  

"நீ இப்போ வீடியோ எதுவும் எடுக்க முடியாது. நான் எடுத்து தரேன். நீ இங்கேயே நின்னுக்க." என்றான் விஜயேந்திரன். 

"இங்கேயா? தனியாவா?" என்று அவள் பயத்துடன் கேட்க 

"ஒரு லேடி கான்ஸிடபிள் வருவாங்க." என்றான் அவன்.  அவன் சொன்னது போல ஒரு  லேடி கான்ஸிடபிள் வந்தார்.  நடுத்தர வயது.  

"பார்த்துக்கோங்க" என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.  இவளுக்கு சும்மாவே நிற்க போரடிக்க அவள் அந்த பெண்ணிடம் பேச தொடங்கினாள்.  

"ஏம்மா இன்னைக்குத்தானே உங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கு.  அதுக்குள்ள இப்படி இந்த ராத்திரி நேரத்தில் வெளியே வரலாமா?" என்று கேட்டார் அந்த பெண்மணி.  

"அது" என்று இவள் இழுக்க 

"சார் வேலை அப்படி.  நேரம் காலம் எதுவுமே கிடையாது.  நாளைக்கு கூட ஒரு கேசு விசயமா மும்பைக்கு போறாரு.  போயிட்டு வர எப்படியும் இருபது நாள் பக்கம் ஆயிடும்.  போலீஸ்காரங்க பொழப்பு எல்லாம் இப்படித்தான் இருக்கு." என்று அந்த அம்மா தன் வேலையை நினைத்து புலப்பிக்கொண்டு இருக்க அந்த அம்மா சொன்ன புது செய்தியை கேட்டு இவளுக்கு திக்கென்றது.  

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now