அத்தியாயம் - 21

630 39 0
                                    

ஒரு ஆணுக்கும் பெண்ணும் திருமணம் நடக்க வேண்டுமென்றால் அதற்கு அவர்கள் சம்மதம் மட்டும்தான் மிகவும் முக்கியம்.  பெற்றவர்களின் சம்மதத்தை கூட இன்றைய தலைமுறை எதிர்பார்ப்பது இல்லை. அப்படியிருக்க மாமன் மகளின் பெயரை தடையாக விஜயேந்திரன் கூறவும் ஏஜே ஷாக் அடித்தது போல ஆகிபோனாள்.  

"என்னடா சொல்ற நீ?" என்றாள் சற்று நேரம் கழித்து.  

"கொஞ்சம் மரியாதையா பேசுறியா? ஒழுங்கா போய் உன் சீட்டில் உட்காரு சொல்றேன்.  காலு வலிக்கு" என்றான் அவன் அசைந்துக்கொண்டு.  

"பொய் சொல்ற. நானெல்லாம் உனக்கு ஒரு வெயிட்டே இல்லை." என்றாள் அவள். 

"வெயிட்டை யாரு சொன்னது? இப்படி முட்டியை கொண்டு அழுத்தினால் வலிக்காமல் இருக்குமா?" என்றான் அவன்.  

"அப்போ இப்படி இருக்கேன்" என்று அவள் இருபுறமும் காலை போட போக 

"எங்கேயாச்சும் மாட்டிக்காம.  எருமைமாடு மாதிரி உருளாம ஒரு இடத்தில் உட்காரு." என்றவன் அவளை திரும்பி இருக்க வைக்க முயற்சி செய்ய 

"உன் மூஞ்சி எப்படி தெரியும் இப்படி இருந்தா?" என்றாள்.  

"அந்த மிரரை அட்ஜஸ்ட் பண்ணு." என்றான் அவன்.  அவள் எம்பி அதை அட்ஜஸ்ட் செய்துவிட்டு அவனை அதன் வழி பார்த்தாள். 

"இப்போ சொல்லு" என்றாள் அவன் கையை பிடித்து தன்னை சுற்றி கோர்த்துக்கொண்டு.  

"என்ன சொல்லணும்? அவளுக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் நான் பண்ணிப்பேன். வம்சியும் பேசித்தான் பாக்குறான். அவ மனசில் என்னத்தான் இருக்குன்னே தெரியல. அவ எப்போ கல்யாணத்துக்கு ஓகே சொல்றாளோ அப்போதான் நம்ம கல்யாணம்.  அதுவரைக்கும் கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இருக்க பாரு. எப்போ பாரு கிஸ் பண்ண வந்துட்டு.  அப்புறம் தள்ளி விட்டுட்டான், பேசிட்டான்னு சண்டைக்கு கிளம்ப வேண்டியது." என்றான் அவன் அவளை பொம்மை போல தூக்கி பக்கத்து சீட்டில் அமர வைத்தப்படி. 

"அவ கல்யாணமே வேண்டாமுன்னு இருந்துட்டா?" என்று இவள் சந்தேகம் கேட்டாள்.  

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now