இராவணனின் சீதை 11 💖

1.1K 27 4
                                    

விக்ரம் இடமிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்று நினைத்து யுகமதி தனது தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு பேருந்து ஏறினால்... மதுரையிலிருந்து சென்னை வரை செல்ல வேண்டும் ...எப்படியாவது விக்ரமின் ஆட்கள் கண்ணிலும் சிக்காமல் சென்று விட வேண்டும் என அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொண்டு பஸ்ஸுக்காக காத்திருந்தாள் ...

ஆனால் அமைச்சர் ஏற்கனவே ஏற்பாடு செய்த இந்த ஆட்கள் அவளை கண்டுபிடித்து விட்டனர்... பேருந்து ஒவ்வொன்றாக மாறி மாறி செல்ல சற்று கூட்டம் குறைந்து இருக்கவே அவளை கடத்துவது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது... அவள் பஸ்ஸுக்காக ரோட்டை கிராஸ் செய்யும்போது எதிரில் ஒரு காரை விட்டு அதில் அவளை உள்ளே இழுத்து கதவை சாத்தி விட்டனர்...

என்ன நடந்தது என்று யூகிக்கவே அவளுக்கு ஒரு நிமிடம் தேவைப்பட்டது... அவள் கத்த முயற்சிக்க ஒருவன் ஒரு அறை விட்டான் ...அதில் லேசாக தலைசுற்ற மேலும் மயக்க மருந்தை அவள் முகத்தில் அடித்து விட்டனர்... கை காலை கட்டி பின்னால் போட்டுவிட்டு சுந்தர பாண்டியன் நடத்தும் பார்ட்டிக்கு வந்து விட்டனர்...

அவர்கள் கடத்தல் தொழில் மட்டுமல்ல பல ஏரியாக்களில் பெண்களை இச்சைக்காக கடத்தி சென்று அவர்களை அனுபவித்து விட்டு வித்து விடுபவர்கள் ....இப்பொழுது அழகே உருவமான யுகமதி கையில் கிடைக்க அந்த ஓநாய்களுக்கு வெறி பிடித்து விட்டது ....சுந்தரபாண்டியனிடம் நேராக சென்றான் ஷங்கர் ...யுகமதியை கடத்தியவர்களின் தலைவன்...

தலைவரே நீங்க சொன்ன பொண்ண தூக்கியாச்சு... சும்மா தங்க சிலையாட்டம் இருக்கு... அதனால கொலை மட்டும் தான் பண்ணனுமா என்று சற்று வழிந்தவரே கேட்க ...எப்படியும் சாவதான போறா உங்க தேவையை முடிச்சுக்கோங்க... என் கண்ணிலே அந்த சனியன் பட கூடாது என்று அவர் கொடூரமாக சொல்ல...

அவர்களோ ஆசையை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு காரை நோக்கி சென்றனர்... எதிரே விக்ரம் யோசித்து கொண்டு உட்கார்ந்தான்... சங்கர் தனது அடியாட்களை வெளியே நிற்குமாறு சொல்லியவன் என்ன விக்ரம் எப்படி இருக்க... இப்ப எல்லாம் தலைவர் நம்ம கைல இந்த சம்பவமும் தருவதில்லை... எல்லாமே நீங்க தான் பண்ற போல இருக்கு...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now