இராவணனின் சீதை 7 💖

1.1K 24 0
                                    

தன் முகத்தில் பயத்தை காட்டினால் அதற்கு காரணமானவர் யாரோ அவரை கண்டிப்பாக தொம்சம் செய்யாமல் விடமாட்டான் யாஷ் என்று தாமதமாக தான் யுகமதி உணர்ந்தால் .... தவறான ஒருவரை அவன் அடித்தாலும் தன் பயத்தால் ஒரு உயிர் போய் விட்டது என்று அவளால் தாங்க இயலாது மயங்கி விட்டால்...

நடந்த அசம்பாவிதத்தை தடுக்க முடியாமல் கோழையாக நின்றதை நினைத்து தன்னை அருவருத்து கொண்டால் ...மயக்கம் தெளிந்த உடன் யாஷை தேடினால்... அருகில் அவளது தந்தை மற்றும் ஜீவானந்தம் மட்டுமே இருக்க யாஷ் எங்க என்று கேட்க... அவர்களால் ஒன்றும் கூற இயலவில்லை.. உன்னை சாயந்தரம் டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க...

நீ வீட்டுக்கு போ அவன் பத்திரமா தான் இருக்கான் என்று வேந்தன் உடன் யுகமதியை அனுப்பிவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்றார் ஜீவானந்தம் ...அங்கு போலீஸீடம் என் பையன் அடிச்சான்னு ஒத்துக்கிறேன் அதுக்காக படிக்கிற பிள்ளையை எப்படி ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்கிறது நல்லா இல்லைங்க ....நான் அந்த பையனோட அப்பா கிட்ட பேசுறேன் சார் யாருன்னு சொல்லுங்க என்று கேட்க....

ஒரு போலீஸ்க்காரர் பையனை அடிச்சு உங்க புள்ள கவலைக்கிடமான நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறார்... நீங்க உங்க பணம் பதவி எதை வைத்து வேணாலும் முயற்சி பண்ணி பாருங்க ஆனா கொஞ்சம் கஷ்டம் தான் என்று இன்ஸ்பெக்டர் கையை விரித்தார்....

வீட்டிற்கு வந்து என்ன செய்வது என்று வருந்தினார் ஜீவானந்தம் ..
அந்நேரம் சரியாக சுந்தர பாண்டியன் வந்தார் ...மச்சான் இதோ நம்ம லாயர் என்று அருகில் ஒருவரை காட்டி மருமகனை வெளியில் எடுத்திடலாம் ... இன்னோருவனை காட்டி இவன் தான் அடிச்சான்னு சொல்லி தம்பிக்கு பதில் அவன் சரண்டர் ஆயிடுவான்...

ஆனா என்ன சிக்கல்னா தம்பியை அந்த பையன் கண்ணு முழிச்சு அடையாளம் காட்டிட்டா என்ன பண்றது ...அதனால அவனை ஏதாவது வெளிநாடு இல்ல வெளியூர் அனுப்பி வைத்திருங்கள்.... மத்தத நான் பார்த்துக்கிறேன் என்று பேசினார் சுந்தரபாண்டியன்... அந்த நேரத்தில் ஒரு தந்தையாக மட்டுமே யோசித்த ஜீவானந்தம் வெளியூர் அனுப்ப சம்மதித்தார்...அவனை வெளியே கொண்டு வந்து விட்டனர்...

இராவணனின் சீதை 💖Donde viven las historias. Descúbrelo ahora