இராவணனின் சீதை 27 💖

999 26 1
                                    

தேவா தன்னைதானே கண்ணாடியில் பார்த்து தூப்பிக்கொண்டான் .. எவ்வளவு கேவலமா அவகிட்ட உண்மைய சொல்லிருக்க .. தேவா மாதிரி யோசிச்சா கண்டிப்பாக எதுவும் சரிவராது... விக்ரம் தான் இதுக்கு சரியான ஆளு. விக்ரம் உன்னோட யுகா பத்தி யோசி ...அவ நீ ரவுடியா இருந்தாலும் உன்னோட காதல் அவளுக்கு புரிஞ்சு இருக்கு ...அது அவ வாயாலேயே யாஷ் கிட்ட பேசும்போது தெரிஞ்சுகிட்ட... இன்னமும் உனக்கு என்ன வேணும் யோசி டா யோசி என்று தனது சுழல் நாற்காலியில் அமர்ந்து யோசித்தான்...

அந்நேரம் ஒரு இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து சார் மார்க்கெட்ல ஏதோ கலவரமாம்... வட்டி குடுக்கலன்னு அங்க கடையில உள்ள பொண்ணை தூக்கிட்டு போயிருக்காங்க.... பெரிய கலவரம் ஆயிடுச்சி சார் என்று பரபரப்புடன் கூறினார்... வேகமாக வரதனை ஜீப்பை எடுக்க சொல்லிய தேவேந்திரன் பல்லை கடித்தான் ...ஊருக்கு நாலு புறம்போக்கு நாய்ங்க இது மாதிரி தான் இருக்கு..

இவனுங்க எல்லாம் ஓட ஓட ஜட்டியோடு அடிக்கணும் என்று மனதில் நினைத்துக் கொண்டே மார்க்கெட் வந்தான் ...ரவுடிகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க லத்தியை எடுத்தவன் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து ரவுடிகளையும் அடித்து துவைத்தான்... யாரோட பொண்ணு என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்க... அழுதபடியே அமர்ந்திருந்த ஒருவரை அழைத்து வந்தார் அவர்... இவரோட பொண்ணு தான் சார் என்று இன்ஸ்பெக்டர் கூறியதும்...

அவர் கவலைப்படாதீங்க ஐயா உங்க பொண்ண பத்திரமா வீடு வந்து சேருவா என்று அவருக்கு தைரியம் கூறியவன்... அந்த கட்டப்பஞ்சாயத்து செய்யும் மூர்த்தி வீட்டிற்கு சென்றான்... ரவுடிகள் நிறைய பேர் வாசலிலேயே அவர் வீட்டுக்கு காவலாக நிற்க... யாரையும் கூட வர வேண்டாம் என்று கூறி தனியாகவே உள்ளே சென்றான்... இளக்காரமாக அசைந்து அசைந்து இலத்தியை சுழட்டியபடியே உள்ளே நடந்தான் தேவா...

யோவ் போலீஸூ எங்கய்யா வீட்டுக்குள்ள வரதுக்கு உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்... அதான் மாசம் மாசம் வாங்குறீங்களே வெளியே போயா என்று ஒருவன் கத்த... திரும்பி அவனை பார்த்தவன் இங்கு வா என்று கண்ணாலே அவனை அழைத்தான்... அவன் என்ன என்று கேட்டவுடன்... தோளில் கை போட்டபடியே உன்ன பார்த்ததும் மனசுக்குள்ள ஒரு பரவசம் வந்துட்டு டா ...

இராவணனின் சீதை 💖Donde viven las historias. Descúbrelo ahora