இராவணனின் சீதை 39

1.1K 22 6
                                    

யுகமதி குழந்தை பிறந்ததும் மயக்கத்தில் இருக்க... யாஷ் விக்ரம் இருவரும் வெளியே அழுதபடி அமர்ந்திருந்தனர்... விக்ரம் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்தி விட்டான்... ஆனால் யாஷ் இன்னும் தேம்பிக் கொண்டே இருக்க... மித்ரா போதும் அழுகாதீங்க எதுக்காக இவ்வளவு அழுகை? ....அதான் உங்க ஜானு நல்லா இருக்காங்களே... குழந்தையை பார்த்தீர்களா.‌. குழந்தை எப்படி இருக்கு என்று கேட்க ... அவன் பதில் கூறாமல் அழுதான்...

குழந்தை ரொம்ப அழகா இருக்கான் மித்ரா... நீ பார்த்தனா உனக்கு ரொம்ப பிடிக்கும் ... குட்டியா ஜானு கலர்ல புசுபுசுன்னு இருந்தான் என்று சிரிப்பும் அழுகையும் கலந்து விக்ரம் ரசனையாக கூற... இன்னும் என் குழந்தையை கொண்டு வந்து நம்ம கிட்ட கொடுக்கல என்று மீனாட்சி கேட்க .. விக்ரமின் தாய் சுத்தம் பண்ணி கூட்டிட்டு வர நேரம் எடுக்குது போல ... இருங்க காத்திருப்போம் என்று அமர்ந்தார் ...

ஜீவானந்தம் மகனின் தோலை தட்டி கொடுத்து போதும்டா அழுவுறதை நிறுத்து... உன் ஜானு இப்ப முழிச்சுக்குவா என்று சொல்ல ... நான் அதுக்கு எல்லாம் அழலை அப்பா... குழந்தை பிறந்ததும் என் ஜானு போல அழகா இருப்பான்னு பார்த்தா ... இந்த பரதேசி பையன் மாதிரியே அச்சு பிசிராமல் இவனோட உருவத்தில் இருக்கான் ... எனக்கு அவனை புடிக்கலப்பா ... எனக்கு பொண்ணு பொறந்தா எப்படி அவனுக்கு கட்டி கொடுப்பேன் என்று யாஷ் மேலும் தனது அன்னையை கட்டிக் கொண்டு அழுதான்...

விக்ரம் அதிர்ந்து துருப்பிடித்த பழைய கதவு போல ஸ்லோ மோசனில் அவனை திரும்பி பார்த்தான்... டேய் மானங்கெட்ட பயலே என் பையனை கல்யாணம் பண்ணிக்க உன் பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும் டா... பிளான் போட்டு கொடுத்து ஹனிமூன் அனுப்பி வச்சா நீ என்னையே திட்டுறியா.. கண்டிப்பா உன் பொண்ணு என் பையன் பின்னாடி சுத்த விட்டு கதற விட்டு கல்யாணம் பண்ண வைப்பேன்டா... அப்ப தெரியும் இந்த விக்ரம் யாருன்னு என்று விக்ரம் கண்ணை துடைத்த படியே கத்த..

என் ஜானு அவளோட குணத்துல கண்டிப்பா அந்த பையனை வளர்ப்பா.‌‌ நீ சொல்றதெல்லாம் அவன் கேட்க மாட்டான் பாரு ... உன் பையன் தான் என் பொண்ணு பின்னாடி சுத்துவான் என்று இல்லாத குழந்தைக்கு இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் ... சதாசிவம் விக்ரம் தலையில் தட்டி இவ்ளோ நேரம் மூக்கு உறிஞ்சிக்கிட்டு உட்கார்ந்திருந்த இப்ப என்ன பேசிட்டு இருக்க... அடிச்சு பல்ல கழட்டி விடுவேன் டா ...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now