இராவணனின் சீதை 40

1K 24 7
                                    

நான்காம் நாள் யுகமதியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்... மித்ராவை எந்த வேலையும் செய்ய விடாமல் பத்திரமாக கவனித்துக் கொண்டார் மீனாட்சி .... யாஷ் முகம் எல்லாம் பல்லாக ஜானு மித்ரா என் இருவரையும் நன்றாக கவனித்து கொண்டான்.. மருமகனை கையில வைத்து வீடு முழுவதும் சுத்திக் கொண்டிருந்தான்... விக்ரம் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை ... குழந்தை பிறந்த அன்று அவளை பார்த்து விட்டதோடு சரி... ஒரு நாளில் நான்கு ஐந்து முறை போனில் நலம் விசாரித்துக் கொண்டிருந்தான்...

இவ்வளவு நாள் பூனை குட்டி போல் சுற்றி வந்தவன் அவளை தள்ளி செல்வது மனம் வலித்தது...யாஷ் அவன் வேலையைப் பற்றி அவளிடம் புரிய வைத்திருந்ததால் அவளும் நிதர்சனத்தை உணர்ந்து அமைதியாக இருந்தால்... ராவணா இரண்டு நாளா என்ன செஞ்சிட்டு இருக்கேன்னு தெரியலையே என்று அவள் புலம்ப ... அதே நேரம் கல்வி அமைச்சரை கத்தியை வைத்து இடுப்பிலும் கையிலும் அவன் கிழித்து கொண்டிருந்தான் ...

சொல்லு பெண்களை யாருக்கு விக்கிற டா... நீ உண்மையை சொல்லல நான் கண்டுபிடித்து உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன்.. அதுக்கப்புறம் நீ எப்படி உயிரோடு இருக்க முடியும்.. எப்படியும் இந்த ரூம விட்டு நீ வெளியே போக போறது கிடையாது ... சொல்லு டா என்று சுந்தரபாண்டியன் அடைத்து வைத்திருந்த அதே வீட்டில் கல்வி அமைச்சர் ராஜமாணிக்கத்தை அடைத்து வைத்திருந்தான் ...

அவர் கத்திய சத்தம் இந்த வீட்டை விட்டு தாண்டி செல்ல முடியாது ... வெளியே கறுப்பு சீருடை அணிந்து வீட்டை சுத்தி 10 பேர் விக்ரமின் குருவால் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தனர் ... உன்னால என்கிட்டே இருந்து உண்மையை வாங்க முடியாது... ஒருவேளை நான் யாருக்கு வேலை செஞ்சன்னு உனக்கு தெரிய வரும் போது அவனால நீ கொடூரமா செத்து இருப்ப என்றான் ராஜமாணிக்கம் ...

அவன் இல்ல அவன் அப்பனே வந்தாலும் அவனை கொன்னுட்டுதாண்டா கடைசியா இந்த விக்ரம் உயிரை கூட விடுவேன் என்று அவரை முகத்தில் குத்த ராஜமாணிக்கம் மயங்கி இருந்தான்... சலிப்புடன் அவனை பார்த்தவன் ஒரு மணி நேரம் கழிச்சு அவன் வாயில மிளகாய் தூளை வைத்து அடைங்க... அப்புறம் உப்பை எடுத்து அவன் உடம்பில் கொட்டுங்க ... எத்தனை சின்ன புள்ளைங்க வாழ்க்கை அழிச்சிருப்பான் என்று கடைசி வார்த்தை மட்டும் வாய்க்குள்ளே மூணு மூணுத்துவிட்டு வெளியே நடந்தான்...

இராவணனின் சீதை 💖Donde viven las historias. Descúbrelo ahora