ரவுடி கஜாவின் வீட்டிற்கு முன் வந்த விக்ரம் அவனைப் பார்ப்பதற்காக உள்ளே செல்ல செந்திலும் பின் தொடர்ந்தான்... என்ன விக்ரம் இந்த பக்கம் உங்க அமைச்சருக்கு ஏதாவது பாதுகாப்பு கொடுக்கனுமா என்று நக்கலாக கேட்ட கஜாவை பார்த்து அவனும் சிரித்தவன் ....
அவருக்கு பாதுகாப்பு கொடுக்கிறது இருக்கட்டும் முதல்ல உனக்கு பாதுகாப்புக்கு நாலு ஆளா ஏற்பாடு பண்ணிக்கோ ....ஏன்னா உன் உயிர் தான் இன்னும் கொஞ்ச நாள்ல போக போறதா கேள்விப்பட்டேன் என்றான் அவனும் அதே நக்கலுடன் ....விக்ரம்ம்ம் என்று கர்ஜனையாக கத்தியவன் என்ன எனக்கே பயம் காட்டுவதற்காக வந்திருக்கியா....
நான் யாரு தெரியும் இல்ல... இந்த மதுரையிலே நான் எவ்வளவு பெரிய ரௌடின்னு சின்ன பசங்க கிட்ட கேட்டா கூட தெரியும் ....இப்ப வந்து சின்ன பையன் நீ என்னையே மிரட்டுவதற்கு எதிர்த்து வந்து நிற்கிற.... இப்பயே உன்னை என் கையால கொன்னு போட்டா கூட கேக்குறதுக்கு ஆள் கிடையாது ....நீ என் இடத்துக்கு வந்து என்னை மிரட்டுரியா என்று கத்தினான் கஜா...
காதை சுட்டு விரலை கொண்டு துடைத்துக்கொண்டு இந்த வயசான காலத்துல எதுக்காக இந்த கத்து கத்துற.... உன் உடம்புக்கு தான் பிபி பிரஷர் இதெல்லாம் ஏறும்.... உன்னை நான் கொல்ல வேணா நீயே செத்துருவ போலயே கத்தி கத்தி என்று கேலியாக கூறியவன்.... இனிமே அமைச்சர கண்காணிக்கிறதோ இல்ல கொலை முயற்சி பண்ண எங்க ஆளுங்களுக்குள்ளே ஒருத்தரை வரவச்சி பேசுறது வச்சிக்கிட்ட உன் உடம்புல உயிர் இருக்காது என்று மிரட்டியவன் வெளியே வந்து வண்டியில் ஏறி விட்டான்...
பின்னாலே வந்த செந்தில் இருந்தாலும் நம்ம அண்ணனுக்கு தைரியம் தான்... இவ்வளவு பெரிய ரவுடி வீட்டுக்குள்ள போயிட்டு அவனையே மிரட்டிட்டு வராரு இல்ல என்று கெத்தாக போகும் விக்ரமை பார்த்தவாறு வண்டியை கிளப்பினான்... மாஸ் காட்ற அண்ணாத அதனால தான் உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்று சிலாகிதப்படியே வண்டியை விக்ரம் வீட்டிற்கு விட்டான் ....
![](https://img.wattpad.com/cover/325373225-288-k928834.jpg)
VOCÊ ESTÁ LENDO
இராவணனின் சீதை 💖
Romanceஇராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .