இராவணனின் சீதை 21 💖

957 21 2
                                    

ஆறு மாதங்களுக்குப் பிறகு...

ஹே ஷாலு ..எங்க போற மிஸ் வர போறாங்க... இன்னைக்கு டெஸ்ட் படிச்சியா என்று ஒரு சிறுமி தனக்கு அருகிலுள்ள அவள் தோழியிடம் கேட்க... படிச்சிட்டேன்டி மிஸ் கிளாஸ்ல சொல்லிக் கொடுத்ததே சூப்பரா புரிஞ்சுதுல அதனால படிக்கவும் ஈசியா இருந்தது என்று ஷாலு கூற ...

எனக்கும் அதேதான்... ஆனா மிஸ் இன்னும் வரல பாரேன் என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க ...அந்த எட்டாம் வகுப்பு உள்ளே நுழைந்தால் ஜானகி என்னும் யுகமதி... இங்கு உள்ளவர்களை பொறுத்தவரை அவள் ஜானகி தான்.. ஏனென்றால் தனது சர்டிபிகேட் அனைத்திலும் யுகமதி என்ற பெயரை ஜானகி என்று மாற்றி விட்டாள்...

குட் மார்னிங் மிஸ் என அனைத்து குழந்தைகளும் அவளுக்கு காலை வணக்கம் சொல்ல ...சிரிப்புடன் தலையசைத்தவள் தனது மேடிட்ட வயிற்றை தாங்கியபடி உள்ளே நுழைந்தாள்... குட் மார்னிங் சில்ரன்ஸ் எல்லாரும் டெஸ்ட்டுக்கு படிச்சாச்சா என்று கேட்க ...எஸ் எஸ் என்று கோரசாக கத்தினர் மாணவர்கள் ...

ஓகே எல்லாரும் எழுத ஆரம்பிங்க என்று கூறியவள் அவர்களைப் பார்த்தவாறு அமர்ந்துவிட்டால் ...எப்போதும் இது நடப்பது தான் ...ஒரு நாள் பாடம் எடுத்தால் அடுத்த நாள் அதை அவர்களுக்கு டெஸ்ட் வைப்பது அவளது வழக்கம்... அந்த வகுப்பு முடிந்ததும் வெளியே வர ஒரு வயசான ஆசிரியை என் மா ஜானகி ஏழு மாசம் ஆகப்போகுது இப்பயும் ஸ்கூலுக்கு வரணுமா ...லீவு அப்ளை பண்ணு என்றார் பாசமாக...

வீட்ல நான் மட்டும் தான் இருக்கேன் டீச்சர்... அங்கு இருப்பதற்கு பசங்க கூட இங்க இருந்தா மனசுக்கு இதமா இருக்கும் என்று அவள் கூறியதும்... உன் புருஷன் அப்படி என்னதான் பாரின்ல வேலை பாக்குறானோ... இப்படி கல்யாணம் பண்ண பொண்டாட்டிய தனியா விட்டுட்டு போயிருக்கான் என்று அவர் கவலை பட்டு கூறியதும்...

தனது வயிற்றை தடவியபடி அவர் வேலை அப்படி என்று மெலிதாக சிரித்தவள் வலி அவர் கண்களுக்கு தெரியவில்லை... அன்றைய நாள் அவளுக்கு மூன்று வகுப்புக்கு மட்டும் தான் செல்லும்படி டைம் டேபிள் இருந்ததால் முடித்துவிட்டு சீக்கிரம் வீட்டிற்கு கிளம்பி விட்டால்... இப்பொழுது அவள் இருப்பது கன்னியாகுமரி அருகில் உள்ள ஒரு சின்ன ஊரில் தான்...

இராவணனின் சீதை 💖Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ