தன் வீட்டில் உள்ள ஹாலில் தளர்வாக அமர்ந்து தலையை ஸோபாவின் பின் சாய்ந்து கண்களை மூடி இருந்தான் விக்ரம்... நினைவில் இன்று ஒருவனே கொடூரமாக கொலை செய்த எண்ணம் எதுவும் இன்றி அமைதியாக சுவற்றை வெறுத்தபடி அமர்ந்திருந்தான் ..அவனுக்கு இது ஒன்றும் புதிதல்ல ......
இந்த மாதத்தில் இது 12வது கொலை ...அதற்காக தனக்கு வேண்டாத வரை எல்லாம் வெட்டிக் கொள்ளும் வகை அவன் இல்லை ....அமைச்சர் சுந்தரபாண்டியன் தனக்கு வேண்டாம் என்று நினைப்பவரை கண்கட்டினால் அவரை உடனே முடிக்கும் ரகமும் கிடையாது.... அவரைப் பற்றி தீவிரமாக விசாரித்த பிறகு போட்டுத் தள்ளுவான்...
அவனை சுற்றி நம்பகமான ஆட்களாக நான்கு பேர் வைத்துள்ளான் மணி, செந்தில், ராஜா, குமார்... இதில் மணி மற்றும் செந்தில் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள்.... ஏதோ நினைப்பில் இருந்தவனை மணி அருகில் வந்து அண்ணா என்று அழைக்க ...சொல்லு மணி என்ன பிரச்சனை என்று கேட்டான் நிதானத்துடன்.... அவளை பற்றி அவன் மறந்து விட்டான்...
மனதை எப்போதும் எந்திர தனமாக வைத்து கொண்டு இருப்பவனுக்கு இது புதிதல்ல...அந்த பொண்ணு உங்களை தெளிவாக பார்த்துட்டு ....ஏதாவது பண்ணலாமா இல்ல சும்மா மிரட்டிட்டு வரலாமா என்று கேட்க.... அதெல்லாம் ஒன்னும் வேணாம் நாளைக்கு நேர்ல போயி பார்த்துக்கலாம்... நானும் வரேன் என்று கூறி விட்டு அத்துடன் அவன் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்துவிட...
இந்த அண்ணன் எப்போதும் நம்மளை பிரச்சனையை பார்த்துட்டு வர சொல்லும் இன்னைக்கு என்ன முதல் தடவை அதுவே வரேன்னு சொல்லுது என்று யோசித்தபடியே அதை செந்திலிடமும் கூறியவன் தனது வீட்டிற்கு கிளம்பி விட்டான்...
இங்கு வீட்டிற்கு வந்த யுகமதி தனக்காக காத்துக் கொண்டிருக்கும் வேலைகளை நினைத்து கவலையாக உள்ளே வந்தாள்.... பிரணிதா பிரணித் இருவரும் அக்காவை பார்த்து ஏதோ கேட்க வர அதற்கு முன் முந்தி கொண்டால் அவர்களின் தாய்... இவ்வளவு நேரம் ஆச்சு உனக்கு அந்த பள்ளிக்கூடத்தை விட்டு வருவதற்கு... படிக்கிற பிள்ளைகளே வந்துட்டு... வாத்தியாருக்கு என்ன வேலை என்று கடுகடுத்தால் அவன் சித்தி....
![](https://img.wattpad.com/cover/325373225-288-k928834.jpg)
KAMU SEDANG MEMBACA
இராவணனின் சீதை 💖
Romansaஇராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .