இராவணனின் சீதை 36 💖

1K 27 8
                                    

யுகமதியின் மேல் கட்டுக்கடங்காத கோபத்தில் விக்ரம் அமர்ந்திருந்தான்... என்ன தைரியம் இருந்தால் அவள் இவ்வாறு கூறியிருப்பாள் என்று நினைக்க நினைக்க அவன் மனம் எரிமலை போல் வெடிக்க காத்திருந்தது .... வேந்தன் தன் மகள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று புரியாமல் புலம்பி தவித்தார்....

இவ்வளவு நாள் தனிமை என்ற கொடுமை அனுபவித்தது அவள் தானே... தன்னால்தான் மற்றவர்களுக்கு ஆபத்து வருகிறது என்று தெரிந்து தான் தன்னை நேசித்த உறவுகள் அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு தன்னந்தனியாக இங்கு வந்து கிடந்தால்... இப்பொழுது தன்னவனுக்கு ஒரு ஆபத்து என்றதும் அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவனை பிரிந்து போக சொல்லிவிட்டு தனது அறையில் அழுது கொண்டிருந்தாள்...

விக்ரமிற்கு அவள் மனது நன்றாக புரிந்தது... வெளியே வரட்டும் இத்தன நாள் பண்ணினதுக்கு சேர்த்து வைத்து உன்னை வெளுக்கிறேன் இருடி என்று மனதில் கருவிக்கொண்டே அவள் அறையை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.... டேய் அவ பாவம் என்ன பண்றதுன்னு தெரியாம குழந்தை மாதிரி கோவப்பட்டு இருக்கா.... அதனால அவ கிட்ட நீ கோபத்தை காட்டாத... நான் அவளுக்கு பேசி புரிய வைக்கிறேன் என்று யாஷ் கூற....

நீ என்னத்த பண்ணி கிழிப்ப... அவ எல்லாம் ஒரு காரணத்தோடு தான் பண்றா.... நீ ஓரமா போய் நில்லு என்று அவன் கத்திக் கொண்டிருக்க.. மொத்த குடும்பமும் யாஷ் வீட்டிற்கு வந்துவிட்டது... மருமக வெளியில வந்தாளா என்று மீனாட்சி கேட்க.... வரல அம்மா என்று யாஷ் வருத்தமாக கூறினான்... மீனாட்சி கதவைத் தட்டி நான் தான் அத்தை வந்து இருக்கேன் மதி... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் டா ..வெளில வா என்று அழைக்க...

மதி எதுவும் பதில் கூறாமல் உள்ளே அமர்ந்திருந்தால் .... பூரணி மதியிடம் தேவா கிட்ட நான் பேசுறேன் நீ வெளில வா முதல்ல என்று கூப்பிட ... அதற்கும் பதில் இல்லை... விக்ரம் எழுந்து வந்தவன் கதவை தனது அடிபட்ட கரத்தாலேயே தட்டியபடி ... இப்ப நீ கதவ தொறக்குறியா இல்லையாடி .... எத்தனை பேர் கூப்பிடறாங்க உள்ள உட்கார்ந்திட்டு என்ன பண்ணிட்டு இருக்க என்று சடசடவென கதவை ஓங்கி அடிந்தான் ...

இராவணனின் சீதை 💖Onde histórias criam vida. Descubra agora