வீட்டின் வாசல் கதவை திறந்த யுகமதிக்கு வெளியே இருந்த நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டால்... ஆம் யாஷ்தான் கலை இழந்த முகத்துடன் கண்ணில் கண்ணீருடன் அவளைப் பார்த்து நின்று கொண்டிருந்தான் ...யுகமதி பதட்டத்தில் பின்னே தடுக்கி விழப் பார்க்க அவளது கையை தாங்கிப் பிடித்தவன் பாத்து ஜானு என்றான் அவளது மேடிட்ட வயிற்றை பார்த்து....
யுகமதி வாசலில் இருந்த மித்ராவை பார்த்தால் ...கல்யாணம் ஆனதற்கு அடையாளமாக கழுத்தில் தாலி நெற்றியில் குங்குமம் வைத்திருந்தால் .... அழுகையுடன் உள்ள வாங்க என்று இருவரையும் அழைத்து அமர வைத்தாள்... தான் சொன்ன காரணத்திற்காக அவளை திருமணம் செய்து கொண்டான் என்பது புரிந்தது ...
மித்ரா ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டு ரொம்ப நன்றி அக்கா ...மாமாவை ரொம்ப விரும்பினேன்... நீங்க சொன்னதுக்காக மட்டும்தான் அவரு என்ன கல்யாணம் பண்ணி இருக்காரு... இல்லன்னா நான் செத்துப் போய் இருப்பேன் என்றால் கண்ணீருடன் ...அவள் கன்னத்தை தடவி விட்டவள் அழாதீங்கோ...
உங்க தோப்பனார் இறந்ததா கேள்விப்பட்டேன்... நோக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனே தெரியல என்று அவள் கூற ...அவர் செத்ததுக்காக நான் வருத்தப்படவே இல்ல அக்கா... உண்மைய சொல்லணும்னா அத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்ச அவர் எப்பவோ செத்துப் போய் இருக்கணும் என்றாள் கோவத்துடன்..
என்ன இருந்தாலும் உங்க தோப்பனார் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று அவள் சொல்ல... அதை விடுங்க வயித்துல இருக்க குட்டி என்ன சொல்லுது... ஏன் எல்லாரையும் விட்டு வந்தீங்க ...நீங்களே இருந்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாமே... இவ்வளவு நாள் எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டீங்க... முக்கியமா உங்களோட தேவ் எப்படி இருந்தார் தெரியுமா...
உடம்பு மட்டும் ஏன் அங்க வச்சுட்டு உயிரை நீங்க கொண்டு வந்துட்டீங்க என்றால் ஆதங்கத்துடன் மித்ரா... யுகமதி இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் ...ஆனால் இவ்வளவு நேரம் ஆகியும் யாஷ் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது அவள் மனது வலித்தது...
BẠN ĐANG ĐỌC
இராவணனின் சீதை 💖
Lãng mạnஇராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .