இராவணனின் சீதை 28 💖

1K 26 1
                                    

விக்ரமைத் தன் அருகில் பார்த்து யுகமதி பயந்து அவனிடமிருந்து விலகி எழுந்தால்... ஆனால் அவன் சிரித்துக் கொண்டே எழுந்து நான் ஒன்னும் பேயில்லை... உன்னோட விக்ரம் தான் என்று சாய்ந்து அமர்ந்தான் ...அவள் இன்னமும் பயத்தில் இருப்பது தெரிய.... உன்கிட்ட உண்மையை சொல்வதற்காக தான் வந்தேன் ....

ஆனா இப்படி நீ விலகு போறது தான் எனக்கு வருத்தமா இருக்கு யுகா.... நான் ஒன்னும் உன்னை கட்டாயப்படுத்தவில்லை.. என் நிலைமை உனக்கு சொல்லி புரிய வைக்க தான் நானும் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்....முதல்ல நான் சொல்றதை கேளு... யாஷ் கூட நீ முதன் முதலா காலேஜ் வந்த ....அழகா பட்டாம்பூச்சி மாதிரி படபடன்னு அடிச்சிக்கிற கண்ணு தேவதை மாதிரி இருந்த நீ...

அவன் கையை பிடித்துக்கொண்டு குட்டி பொம்மை மாதிரி அந்த இடத்தை சுத்தி திருவிழாவுல அதிசயமா குழந்தைகள் பார்க்குமே அது மாதிரி பாத்துட்டு வந்துட்டு இருந்த.... அப்பவே உன்கிட்ட விழுந்துட்டேன்... நீ சின்ன பொண்ணுன்னு நான் பார்த்ததுமே தெரிஞ்சுது... அதனாலதான் கொஞ்ச நாள் பாசம் காட்டி என் அன்பை புரிய வைக்கலாம் என்று நினைத்தேன்... ஆனா அதுக்குள்ள அவன் தப்பா புரிஞ்சுகிட்டு என்னை அடிச்சிட்டான்..

இருந்தாலும் பரவாயில்லை என்று கொஞ்ச நாள் கழிச்சு உன்னை வந்து பார்க்கலாம் என்று நினைச்சேன் ...ஐபிஎஸ் எக்ஸாம் எழுதிட்டு வேலைல சேர்ந்து நல்லா தான் உன் நினைவுகளோடு நாள் போயிட்டு இருந்தது... அப்பதான் என் பிரண்டு சுஜால் அகீர் பாய் பையன் அமைச்சர் பண்ற தப்பான வேலை எல்லாம் கண்டுபிடிச்சு ஆதாரம் சேகரிக்க ஆரம்பிச்சான் ....

அவனை அமைச்சர் கொன்னுட்டாரு ....அந்த கேஸ் எடுத்து நடத்த தான் ஒரு ரவுடி மாதிரி அவரை நம்ப வைத்து அவரோட இருந்தேன்.... அவருக்கு எதிரா எல்லா ஆதாரமும் நான் சேகரிக்க ஆரம்பிச்சேன்.... அவர் உன்னை ரொம்ப மெரட்டுறது நடுவுல தெரிஞ்சு... ரத்தம் கொதிச்சு போயி உனக்கும் ஒரு பாதுகாப்பை ஏற்பாடு பண்ணினேன்... உன்னை அடிக்கடி நான் பார்க்க வருவேன் உனக்கே தெரியாம....

இராவணனின் சீதை 💖Donde viven las historias. Descúbrelo ahora