விக்ரம் யுகமதி கண்விழித்தது தெரிந்ததும் அவள் தன்னைப் பார்த்து பயத்தில் அலறுவால் என்பதற்காக பாய்ந்து சென்று அவள் வாயை முடினான்.... அவளோ அவனிடமிருந்து விடுபட முயற்சிக்க சத்தம் போடாதே என்றான் உறுமலாக...
இவ்வளவு அருகில் அவனை பார்த்து பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அவள் விழிக்க... நான் கேட்டதுக்கு என்ன பதில் யோசித்து இருக்க என்றான் மெதுவாக... சத்தியமாக இந்நேரத்தில் தனது வீட்டிற்கே வந்து அவன் கேட்பான் என்பதை சிறிதும் அவள் எதிர்பார்க்கவில்லை....
அவள் வாயிலிருந்து மெதுவாக கையை எடுத்தவன் பதில் சொல்லு என்றான் சற்று தள்ளி அவள் கட்டியில் அமர்ந்து .... பயத்தில் பேச்சு வரவில்லை இருந்தாலும் என்ன விட்டுடுங்க... எதற்காக நீ என்ன கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியல.... நான் ஒரு சாதாரண வீட்டுக்கு பொண்ணு... நீங்க எதிர் பார்ப்பது போல இல்லை என்று வார்த்தைகள் திக்கி திணறி விழ ....
என்ன நான் ஒரு ரவுடி அதான காரணம் என்று கேட்க ...அவள் ஆம் என்று தலையை ஆட்டும் முன் அவள் தலை முடியை கொத்தாக பிடித்தான்... ஏன் ஒரு ரவுடிக்கு வாழணும்னு ஆசை வரக்கூடாதா... கல்யாணம் பண்ணனும்னு எண்ணம் வரக்கூடாதா என்று கேட்க... அத்தனை பேரை கொலை செஞ்சிட்டு நீ மட்டும் சந்தோஷமா வாழனும்னு நினைக்கிறது என்ன நியாயம் என்று அவள் வாய் கேட்க துடித்தது ..
ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டவள் ... தன் சத்தம் கேட்டு வீட்டில் அனைவரும் விழித்து விடுவார்கள் என்று அமைதியாக இருந்தாள்...எனக்கு உங்களை பிடிக்கல என்று வலியிலும் அவனிடம் இருந்து தப்பிக்கும் நோக்கிலும் சொன்னால்... ஆனால் அது அவன் கோபத்தை இன்னும் தூண்டி விட... ஓஹோ உங்க மாதிரி ஆளுக்கு ஒரு கொலை பண்ணா நல்லவன்... ஆனா நிறைய கொலை பண்றாங்கன்னு கெட்டவங்க அப்படித்தானே என்றான் கர்ஜனையாக... அவன் கூறியதைக் கேட்டு மிரட்சியுடன் பார்த்தால் யுகமதி ...
என்ன.. எனக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா.. அந்த சுந்தரபாண்டியன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கேன்... எனக்கு அவனோட நல்லது கெட்டது... அவனை சுற்றி என்ன நடக்கிறது எல்லாமே தெரியும் ...ஆனா நான் என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருப்பேன்... உன்னை பார்த்தேன் புடிச்சது...
ESTÁS LEYENDO
இராவணனின் சீதை 💖
Romanceஇராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .