இராவணனின் சீதை 38

1K 25 7
                                    

விக்ரம் கூறியதை கேட்டதும் யாஷின் மனம் மித்ராவை எண்ணி வருத்தம் கொண்டது... தனக்காக இத்தனை நாள் காத்திருந்த அவளை உற்று பார்த்தான் ... ஜானு தனக்கு இவளை கல்யாணம் செய்து வைத்திருக்காமல் இருந்தால் இவள் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்று நினைக்கும் போதே மனது பதப்பதித்தது... கண்டிப்பா அந்த கவலை வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நெற்றியில் முத்தமிட்டு அணைத்து கொண்டான் ...

நீண்ட பயணத்திற்கு பிறகு கார் வந்து நின்ற இடம் வால்பாறை .... குளிர் உடம்பை ஊசி போல துளைக்க மித்ரா கண்விழித்தால்... தன்னை அணைத்துக் கொண்டு கார் வெளியே பார்த்துக் கொண்டிருந்த யாஷை பார்த்து... நாம எங்கே போகிறோம் என்று பயந்து படி கேட்க .... நம்ம வீட்ல இருக்கே ஒரு சைக்கோ நம்ம ரெண்டு பேருக்கும் ஹனிமூன் பிளான் போட்டு அனுப்பி வச்சிருக்கான்...

இருந்தாலும் அவனுக்கு இருக்கிற அறிவு எனக்கு இல்லை பாரேன்... தான் தங்கச்சிக்கு சந்தோஷத்தை கொடுக்கணும்னு அவ புருஷன் கூட அனுப்பி வச்சிருக்கான்.... அவனைவிட இங்கே நல்ல மனசு இங்க யாருக்கு இருக்கும் சொல்லு என்று அவன் விக்ரமை பற்றிய பெருமையாக கூற ... இவருக்கு ஏதாவது பேய் பிடிச்சிருக்கா... இவரு அண்ணனை பத்தி இவ்வளவு நல்லா சொல்ல மாட்டாரே என்று அவனைப் பார்க்க ....

நீ என்ன நினைக்கிறன்னு என்று எனக்கு புரியுது... அவன் ஒரு லூசு தான் இருந்தாலும் அவன் ரொம்ப நல்லவன்.... மத்தவங்களுக்காக யோசிக்கிற ஆளு அவன்... இல்லனா அந்த லூசை எல்லாம் எப்படி ஒரு போலீஸா இருப்பான் என்றான் காரணத்துடன் ... அவனை பத்தி பேசுறதுக்கா இங்க வந்தோம்... நம்மள பத்தி பேசலாம் என்று அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொள்ள... டிரைவர் இருக்காரு என்று அவனை பிடித்து தள்ளி அமர வைத்தாள் மித்ரா...

தங்களுக்கு என புக் செய்யப்பட்டிருக்கும் எஸ்டேட்டிக்கு வந்திருந்தனர் இருவரும்... இங்கே என்ன இவ்வளவு குளிரா இருக்கு என்று கேட்க ... உன் குளிர போக்குவதற்கு எனக்கு ஒரு ஐடியா இருக்கு என்று யாஷ் மர்மமாக கூற ... சீக்கிரம் பண்ணி தொலைங்க இல்ல ஸ்வெட்டர் ஏதாவது இருக்கா பாருங்க என்று அந்த இடத்தை சுத்தி பார்த்துக் கொண்டு மித்ரா கேட்க...

இராவணனின் சீதை 💖Onde histórias criam vida. Descubra agora